கலிக்கம்ப நாயனார் - KALIKKAMBA NAYANAR
![]() |
| 🔔🙏🌷🛕 பெண்ணாடம் எம்பிரான் ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் மடாலயம் 🛕🌷🙏🔔 |
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உ
ஓம் நமசிவாய! சிவாய நம ஓம்!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!!
திருத்தூங்கானைமாடமுடைய பிரளயகாலேசுவரரே போற்றி!
கை வழங்கீசனாரே போற்றி போற்றி!!
"சிவமயம்"
"திருச்சிற்றம்பலம்"
"அன்பே சிவம்"
"எம்பெருமாட்டி காக்கும் நாயகி 'ஸ்ரீ கடந்தை நாயகி' என்கிற 'ஸ்ரீ அழகிய காதலி அம்மன்' என்கிற 'ஶ்ரீ ஆமோதனாம்பாள்' உடனுறை எம்பெருமான் ஸ்ரீ கடந்தை நாயகராம், 'ஶ்ரீ கை வழங்கீசனார்' என்கிற 'ஶ்ரீ பிரளயகாலேசுவரர்' என்கிற 'ஸ்ரீ சுடர்கொழுந்தீசர்' என்கிற 'ஸ்ரீ தூங்கானைமாடத்து நாதர்' துணை"
"ஸ்ரீ அன்பிற்பிரியாள் அம்மன் துணை"
"மங்கள தேவி ஸ்ரீ கண்ணகி அம்மன் துணை"
"வணிகர் குல நாயன்மார்கள் அறுவர் துணை"
"எம்பிரான் ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் துணை"
"எம்பிரான் ஶ்ரீ மெய்கண்டார் துணை"
"எம்பிரான் ஶ்ரீ சிவ மறைஞான சம்பந்தர் துணை"
"கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் அடியார்க்கும் அடியேன்!" 🙏
கைதடிந்த கடந்தைநகர் ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் திருத்தாள் போற்றி! 🙏🏻
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
ஸ்ரீ கலிக்கம்ப நாயனாரின் குல வழித்தோன்றல்களாகிய வணிக வைசிய (வாணியர் செட்டியார்கள்) சமூகத்துக்கு பாத்தியப்பட்ட, சொந்தமான,
பெண்ணாடம் எம்பிரான்
"ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் மடாலயம்"
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
கலிக்கம்பரின் குல வழித்தோன்றல்களாகிய வணிக வைசிய (வாணியர் செட்டியார்கள்) சமூகத்துக்கு பாத்தியப்பட்ட, சொந்தமான, எம்பிரான் ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் மடாலய திருக்கோயில் என்பது இந்திய திருநாட்டின் தமிழ்நாடு மாநிலத்தின், கடலூர் மாவட்டத்தில், திட்டக்குடி தாலுக்காவில், பெண்ணாடம் - 606 105, பெண்ணாடம் நகரில், கிழக்கு இராஜ வீதியில் அமைந்துள்ளது.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
இம்மடாலய திருக்கோயில் கலிக்கம்ப நாயனாரின் திருஅவதாரம் மற்றும் முக்தி ஸ்தலம் ஆகும்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
மடாலயம் தோற்றம் வரலாறு
எம்பிரான் கலிக்கம்பரின் குல வழித்தோன்றல்களாகிய வணிக வைசிய வாணியர் செட்டியார் சமூக மக்களால், பெண்ணாடத்தில் வணிக வைசிய வாணியர் குலத்தில் அவதரித்து, சிவன் அடியார்களுக்கு, திரு அமுது படைத்தல் திருத்தொண்டினை, சிவத்தொண்டினை புரிந்து, திருத்தூங்கானை மாடத்து இறைவனால், ஆட்கொண்ட பேரருளை பெற்று, இத்தலத்திலேயே முக்தி பேறு அடைந்து, 63 நாயன்மார்களில் ஒருவராக இருந்து குருவருள் புரியும் கலிக்கம்பருக்கு, அவருக்கென ஒரு மடாலயம் தனியே கட்டுவதற்காக, கடந்த 85 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பவுன் ரூபாய் 70 முதல் 90 என்று விற்ற காலத்தில், வீட்டுக்கு 5, 10, 20, 50, ரூபாய் என வீட்டுக்கு வரி விதிக்கப்பட்டு, வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, ஆண்கள், வீட்டு குடித்தனங்கள் (பெண்கள்) உட்பட குடும்பத்தில் இருந்தவர்கள் தனித்தனியாக வரி செலுத்தி, பெண்ணாடத்தில் வாழ்ந்த வாணிய செட்டியார் சமூக சொந்தங்களால், கிழக்கு இராஜ வீதியில், 1938-ல் காலி மனை வாங்கப்பட்டு, பெண்ணாடம் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வாணிய செட்டியார் சொந்தங்களிடமும் வாணியர் சமூக சங்கங்கள் , நிர்வாகங்கள், ஊர் மக்களிடமும் திருப்பணி நன்கொடைகள் வசூலித்து, கடந்த 2014-ல் திருவருள், குருவருள் கிருபையால் புதியதாக கலிக்கம்பருக்கு மடாலயம் கட்டப்பட்டு, 09.02.2014 அன்று கும்பாபிஷேகம் சிறப்பாக முடிந்து, கடந்த 9 வருடங்களாக கலிக்கம்ப நாயனார் மடாலயமானது வணிக வைசிய (வாணியர் செட்டியார்) சமூகத்தார்களுக்கு பாத்தியப்பட்டதும், சொந்தமானதும் மற்றும் இவர்களின் சட்டப்படி உரிமைக்கும், அதிகாரத்திற்கும், நிர்வாகத்திற்கும், கடமைக்கும், பெருமைக்கும் உரியது என்ற அடிப்படை வகையில், சீரும் சிறப்புமிக்க முறையில், நிர்வகித்து சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
![]() |
| ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் மூலவர் & உற்சவர் |
![]() |
![]() |
| தை - ரேவதி குருபூஜை விழா, ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் உற்சவர், நகர்வலம் வீதிவுலா வரும் காட்சி |
![]() |
| மாத ரேவதி குருபூஜை, ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் உற்சவர், மடாலய வளாகத்தில், உள்பிரகார உலா வரும் காட்சி |
![]() |
| ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் மடாலயம் உள்பிரகாரம் |
மடாலயம் அமைப்பு
நுழைவுவாயில் வளைவுடன் கூடிய சிறிய மடாலய திருக்கோயில் இது. மூலஸ்தான கருவறையில் ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் மூலவர் சிலை திருவாட்சி மற்றும் பார்வை தகடுகள் பொருந்திய அம்சத்தில் உள்ளது. முன் கருவறையில் ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் உற்சவர் சிலை உள்ளது. கருவறை நுழைவாசலின் இடது பக்கம் ஸ்ரீ வாணிய பிள்ளையார் என்கிற ஸ்ரீ வலம்புரி விநாயகரும், வலது பக்கம் ஸ்ரீ வாணிய முருகன் என்கிற ஸ்ரீ பாலமுருகனும் எழந்தருள்பாலிக்கின்றனர். இந்த கருவறைக்கு முன்னால் பிரமாண்ட முன் மண்டபம் உள்ளது. நுழைவுவாயில் வளைவுக்கும் முன் மண்டபத்திற்கும் இடையில் இரு பக்கங்களிலும் காலி இடங்களில் வில்வ மரம், வேம்பு மரம் மற்றும் பூ செடிகள் நந்தவனம் உள்ளது. மடாலயத்தை பிரகார உலா வருவதற்கும் போதிய வளாக வசதி பொருந்தியது. மூலஸ்தானத்திற்கு பின்புறம் மூன்று அறைகள் முறையே மடாலய மடப்பள்ளிக்காகவும் மடாலய திருக்கோயிலின் பூஜை மற்றும் அபிஷேக பொருட்கள் வைக்கவும், நிர்வாக அலுவலகத்திற்காகவும் உள்ளது.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
அறிவோம் "பெண்ணாடம் ஸ்தல வரலாறு"
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
![]() |
| 'ஸ்ரீ அழகிய காதலி அம்மன்' என்கிற 'ஶ்ரீ ஆமோதனாம்பாள்' உடனுறை 'ஶ்ரீ கை வழங்கீசனார்' என்கிற 'ஶ்ரீ பிரளயகாலேசுவரர்', பெண்ணாகடம் |
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
இறைவர் திருப்பெயர் :
ஸ்ரீ சுடர்க்கொழுந்தீஸ்வரர், ஸ்ரீ பிரளயகாலேசுவரர், ஸ்ரீ கை வழங்கீசனார், ஸ்ரீ திருத்தூங்கானைமாடத்து நாதர், திருத்தூங்கானைமாடமுடைய நாயனார், திருத்தூங்கானைமாடமுடைய மகாதேவர், திருத்தூங்கானை மாடத்துக் கடவுள், ஸ்ரீ கடந்தை நாயகர்
இறைவியார் திருப்பெயர் :
ஸ்ரீ ஆமோதனாம்பாள், ஸ்ரீ அழகிய காதலி அம்மன், ஸ்ரீ கடந்தை நாயகி
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
“-பூங்குழலார்
வீங்கானை மாடஞ்சேர் விண்ணென்றகல் கடந்தைத்
தூங்கானைமாடச் சுடர்க்கொழுந்தே. (அருட்பா)
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
"குடந்தையில் (கும்பகோணம்) தீராத பாவம் கடந்தையில் (பெண்ணாடத்தில்) தீரும்" என தொன்றுதொட்டே விளங்கும் பழமொழி இது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பெண்ணாடம் பொக்கிஷம் பற்றிய கல்வெட்டு பாடல்:
மூலத்தில் சிவனிருப்பான்அவனுக்கு மேலேயும் சிவனிருப்பான்
கீழேயும் சிவனிருப்பான்.
கீழிருக்கும் சிவனை
மேலேற்றினால்.....
மேன்மையடையும் பெண்ணாடமும்
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம் - 606105, திட்டக்குடி தாலுக்கா, கடலூர் மாவட்டம். [திருக்கோயில் எண் : TM020411]
தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை
![]() |
"பெண்ணாடம் ஸ்தல வரலாறு" விளக்கும் காட்சி படங்கள்👆 |
புராண வரலாறு :-
தேவ உலகில் ஒரு நாள் தேவேந்திரனுக்கு சிவபூஜை செய்ய பூக்கள் கிடைக்கவில்லை. எனவே மண்ணுலகிலிருந்து பூக்களைக் கொய்து வர தேவகன்னியரை அனுப்பினான். நில உலகம் முழுவதும் சுற்றி வந்தும் பூக்கள் கிடைக்கப்பெறாத தேவகன்னியர், நடு நாட்டின் கண் திருக்கடந்தை என்று அப்போது அழைக்கப்பட்டு வந்த பெண்ணாகடத்திலுள்ள பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில் நந்தவனத்தில், உயர்ந்த மலர் சோலையாகிய இத்தலத்தில், பல வகை பூக்கள் பூத்துக் குலுங்குவதை கேள்விப்பட்டு, இந்த நந்தவனத்திற்கு சென்று வேண்டிய மலர்களைக் கொய்தனர். ஆனால் அங்கு அவர்கள் உணர்வு வயப்பட்டார்கள். அங்கு வீற்றிருந்த பிரளயகாலேஸ்வரர் அருளொளியால் ஈர்க்க பெற்றார்கள். தம்மை மறந்த சிவ சிந்தனையில் தோய்ந்து பறித்த பூக்களை அங்கு எழுந்தருளி இருக்கும் சிவலிங்கப் பெருமானுக்கு சாத்தி வழிபட்டு இருந்த விட்டனர். மலர்கள் வாராமைகண்டு, இந்திரன் காமதேனுவை அனுப்ப அது வந்து, நிலையறிந்து, தானும் இறைவனை பால் சுரந்து வழிபட்டு நின்றது. காமதேனுவைத் தேடிச்செல்லுமாறு இந்திரன் தன் ஐராவதம் என்ற வெள்ளை யானையை அனுப்ப, அதுவும் வந்து, நிலைமைகண்டு, இறைவனை வணங்கி, அங்கேயே நிழல் காத்து நின்றுவிட, ஒன்றும் புரியாத இந்திரன், தானே புறப்பட்டு பூலோகம் தேடிவந்து, நிலைமையறிந்து தானும் பெருமானை வழிபட்டான் என புராண வரலாறு கூறுகிறது. எனவே, மேற்சொல்லிய நால்வரும் வழிபட்ட தலம் - 'திருப்பெண்ணாவுகடம்' எனப்பெயர் பெற்றதென்பர். அதாவது,
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
இங்குள்ள இறைவனை/னுக்கு,
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
"தேவலோக கன்னிகைகள்" வழிபட்டமையாலும்,
"காமதேனு பசு" பால் சுரந்தமையாலும்,
"ஐராவதம் என்கிற இந்திரனுடைய வெள்ளை யானை" நிழல் காத்து நின்றமையாலும்,
தேவலோக பெண்கள், காமதேனு, வெள்ளை யானை என இவர்களை தேடி வந்த "தேவேந்திரனும்" இங்கு வந்து இறைவனை வழிபட்டமையால் இந்த திருத்தலமானது "திருப்பெண்ணாவுகடம்" என அழைக்கப்பட்டது.
அதாவது,
திரு (தேவேந்திரன்) + பெண் (தேவ கன்னிகைகள்) + ஆவு (காமதேனு பசு) + கடம் (ஐராவதம் வெள்ளை யானை) இவர்கள் இங்கு வந்து இறைவனை வழிபட்டமையால், இவ்வூர் "திருப்பெண்ணாவுகடம்" என்ற இப்பெயரினை பெற்றது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
" #திருப்பெண்ணாவுகடம் " என்பது " #பெண்ணாகடம் " என்று நாளடைவில் மறுவி தற்போது " #பெண்ணாடம் " என்று அழைக்கப்படுகிறது.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
மேலும், இத்திருத்தலமானது,
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
ஸ்ரீ கலிக்கம்ப நாயனாரின் அவதாரம் மற்றும் முக்தி அடைந்த இடமாக திகழ்கிறது என்பது மிகவும் சிறப்புக்குரியது.
அதாவது #கலிக்கம்பர் அவதரித்த, முக்தியடைந்த ஸ்தலமும்,
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
மற்றும்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
நேரடியாக கைலாயத்துடன் தொடர்பு கொண்ட, நந்திதேவரை குருவாக கொண்ட, திருக்கைலாய பரம்பரை அகச்சந்தான குரவர்களில் நான்காமவராகிய பரஞ்சோதியாரின் சீடர்களாகிய,
சிவஞான போதத்தை அருளியவரும், சைவத் தத்துவத்தின் முன்னோடியும், புறச்சந்தான குரவர்களில் முதன்மையானவருமான, ஶ்ரீ மெய்கண்டார்
அவதரித்த ஸ்தலமும்,
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
மற்றும்
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
புறச்சந்தான குரவர்களில் மூன்றாதவர், ஶ்ரீ சிவ மறைஞான சம்பந்தர்
வாழ்ந்த ஸ்தலமும்,
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
மற்றும்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
அப்பர் பெருமான் (திருநாவுக்கரசர்), ஸ்ரீ தூங்கானைமாடத்து நாதர் இறைவனை வழிபட்டு ‘ஐயனே, சமணத்தோடு வாழ்ந்த இவ்வுடலை விரும்பவில்லை. ஆதலால் தங்களின் சின்னமான இடபத்தையும், சூலத்தையும் பொறித்தால் தங்களின் திருநாமத்தை போற்றி வழிபட்டு மகிழ்ந்திருப்பேன்.’ என்று வேண்டினார். "பொன்னாற் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்" எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார். நாவுக்கரசர் பதிகத்தை முடித்தவுடன், சிவகணம் ஒன்று யாரும் அறியாத வண்ணம் அவருடைய தோள்களில் இடப முத்திரையையும், சூலச்சின்னத்தையும் பொறித்தது இத்திருத்தலத்தில் தான். ஸ்ரீ சுடர்கொழுந்தீசர் இறைவனின் கருணையை எண்ணி அப்பர் பெருமான் மகிழ்ந்த ஸ்தலமும் இதுவே.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
மற்றும்
🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊
ஒரு சமயம் பிரளயம் ஏற்பட்டது. வெள்ளம் பெருக்கெடுத்து உயிர்களையும் உடைமைகளையும் அழித்து வந்தது. ஆனால், வெள்ளாற்றிற்கும், தென்பெண்ணை ஆற்றிற்கும் இடைப்பட்ட நடுநாட்டில் மட்டும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதற்கு, அங்குள்ள இறைவனே காரணம் என்பதை தேவர்களும், முனிவர்களும் உணர்ந்தனர். அத்தல இறைவனிடம் மக்களைக் காத்தருள வேண்டி நின்றனர். அதற்குச் செவிசாய்த்த இறைவன், பிரளயத்தை தடுக்குமாறு நந்திதேவருக்கு ஆணையிட்டார். நந்திதேவர் ஊழி வெள்ளத்தைத் தன் வாயால் உறிஞ்சி, உலகைக் காத்தருளினார். எனவே இத்தல இறைவன் 'பிரளயகாலேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். இதனால், இத்திருத்தலத்தில் நந்திதேவர் இறைவன் ஸ்ரீ பிரளயகாலேசுவரர்-ஐ நோக்கியில்லாமல் கோயில் வாயிலை நோக்கி, அதாவது, கிழக்கு நோக்கி அமர்ந்து இருக்கும் வண்ணத்தில் அருள்பாலிக்கும் ஸ்தலமும் இதுவே.
🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊
மற்றும்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
திருக்கடந்தை புராணம் :-
இத்தலத்தின் சிறப்பினை சிவஞானப்பிள்ளை பிரான் என்பவர் அருளிய திருக்கடந்தை புராணம் மிக அழகாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறுகிறது.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
"பெரியது எது"
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
- ஒளவையார் தனிப்பாடல்கள் : 56
- ஒளவையார் பிராட்டி
கருத்து
எனவே, சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். எனவே இத்தகைய சிறப்புமிக்க சிவ அடியார்களின் வரிசையில், கலிக்கம்பரின் "சிவவழிபாட்டு முறையை" அதாவது "திருஅமுது படைத்தல் திருத்தொண்டான சிவத்தொண்டினை" உலகுக்கு உணர்த்திச் சென்ற சிவ அன்பர் கலிக்கம்ப நாயனாரின் தெய்வீக சிவத்தொண்டினை தலை வணங்குவோம். என்றென்றும் எம்பிரான் ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் வழியின் சிவத்தொண்டில், சிவநெறியில், சிவபக்தியில், சிவ உணர்வில், இறைப்பணிகளில், சமயப்பணிகளில் ஈடுபடுவோம்.
“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”
🙏🙏🙏🙏🙏
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பெண்ணாகடத்துக் கலிக்கம்பனே!
"ஓதம் மலிநீர் விடம் உண்டார் அடியார் என்று உணரா மாதர் ஆர் கைதடிந்த கலிக்கம்பர் மலர்ச் சேவடி வணங்கி"
🙇🏻♀🙇♂🙇♂🙇🏻♀🙇🏻♀🙇♂🙇
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
*" எம்பிரான் ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் "*
*வழிபாடு:* சங்கம வழிபாடு
*அவதாரத் தலம் :* நடு நாடு, திருப்பெண்ணாவுகடம் - பெண்ணாவுகடம் - பெண்ணாகடம் (பெண்ணாடம்)
*முக்தி தலம் :* நடு நாடு, திருப்பெண்ணாவுகடம் - பெண்ணாவுகடம் - பெண்ணாகடம் (பெண்ணாடம்)
*திருஅவதார மாதம் & திருநட்சத்திரம் :* மார்கழி - பூரட்டாதி
*முக்தியடைந்த மாதம் & திருநட்சத்திரம்:* தை - ரேவதி
*குருபூஜை நாள் :* தை - ரேவதி
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ கடந்தை வாணிபராம், எம்பிரான் ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் - புராணம் வரலாறு
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புராணம் வரலாற்றை அறிய பின்வருமாறு தொடங்குகிறது.......!
அடியார்களுடைய வாழ்க்கை வரலாறுகளை நாம் உன்னிப்பாகக் கவனிக்கின்ற பொழுது ஒரு விஷயம் தெரியவரும்.
அவர்கள் சிவபக்தி, சிவநெறி, சிவத்தொண்டு, சிவ உணர்வு தவிர வேறு விஷயங்களைப் பெரிதாக நினைப்பதில்லை.
அவர்கள் செய்த சில செயல்கள், சமூகத்துக்கு ஏற்புடையதாக இல்லாததாக நாம் விவாதிக்கலாம்.
ஆனால் அவர்களிடமிருந்த சிவ உணர்வும், சிவ பக்தியும், சிவ தொண்டும், சிவ நெறியும், இறையடியார்களிடத்திலே, சிவனடியார்களிடத்திலே கொண்ட அன்பும் நாம் உணர்வுப் பூர்வமாக விளங்கிக்கொண்டால் தான், அவர்கள் செய்யும் காரியங்களை நம்மாலே விளங்கிக்கொள்ள முடியும்.
கலிக்கம்ப நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் சிவன்பால் மெய் அடிமைகொண்ட அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். தமிழ் கூறும் இவ்வுலகில் சைவம் தழைத்தோங்க சான்றோர்கள் பலர் அவதரித்த நடுநாட்டில் உள்ள திருத்தலங்களில், வளங்கள் சிறந்த, ஒழுக்கம் நிறைந்தவர் வாழும் பழம்பதி திருத்தூங்கானை மாடம் எனும் திருப்பெண்ணாவுகடத்தில் (பெண்ணாகடம் - பெண்ணாடத்தில்), வணிகர் குலத்தில் {வணிக வைசியர் (வாணியர் செட்டியார்) குலம்}, ஸ்ரீ கலிக்கம்பர் அவதரித்தார்.
அவர் சிவனடிப்பற்றாகிய அன்புடனே வளர்ந்து அப்பதியில் தூங்கானை மாடத் திருக்கோயில் எழுந்தருளிய சிவக்கொழுந்து நாதருடைய திருத்தொண்டிலேயே பற்றாகப் பற்றிப் பணிசெய்து வந்தவர். அவர் வேறு ஒரு பற்றுமில்லாதவர். சிவலிங்கத்தை வழிபடினும் சிவனடியார்களை வழிபடாதொழியின் அவ்வழிபாடு சிறிதும் பயன்படாது என்று சிவாகமஞ் செப்புதலால், தினந்தோறும் சிவன் அடியார்களுக்கு, விதிமுறைப்படி, திருத்தொண்டாக இனிய திருவமுதினை பாலிக்கும் சிவத்தொண்டினை செய்வதோடு, அத்தகைய அன்பர், என்றும் சிவனடியார்களுக்கு அமுது செய்தற்குரிய மேலாய திருவமுதுடன், விரும்பும் கறி வகைகளும், நெய்யும், தயிரும், இனிய கட்டியாகக் காய்ச்சிய பாலும், தேனை விட இனிய பழங்களும், கரும்புக் கட்டியும் என்னும் இவை முதலானவற்றைப் படைத்து, நிறைவாக அவர்கள் உண்ணும் படியாய்ச் செய்வித்து, வேண்டுவனவற்றை வேண்டுந் திரவியங்களெல்லாவற்றையுங் இன்பம் பொருந்த அளித்து வந்தவர் ஸ்ரீ கலிக்கம்பர்.
"சிவனடியார் கோலத்தில் யார் வந்தாலும், வருவது எல்லாம் வல்ல சிவபெருமானே" என கள்ளகபடமின்றி உளமாற சிவபக்தியையும், சிவநெறியையும் கருதி சிவ உணர்வோடு சிவத்தொண்டாக, அவர்களின் திருப்பாதங்களுக்கு அவரது மனைவி கரக நீர் வார்க்க, இவர் கழுவி, பொட்டிட்டு, மலரிட்டு, பாத பூஜை செய்து, பிறகு வீட்டினுள் அமர வைத்து திருஅமுது படைத்து, அவர்களது பசியாற்றி வணங்கி தொழுவது மூலமாக அன்பு காட்டி சிவத்தினை உளமாற மெய்களால் கண்டு "அன்பே சிவம்" என்ற சிவ தத்துவத்தை உலகிற்கு முதன்முதலாக காட்டிய திருத்தொண்டான சிவத்தொண்டினை ஒரு நாளும் தவறாமல் செய்து வந்தார்.
இவ்வுலகில் "பசி வந்திட பத்தும் பறந்துபோகும்" என்பது பழமொழி, அந்த பசியை போக்குவது எது? உணவு. அன்புக்கு உணவேதான் அடிப்படை, எனவே, அன்பே சிவமானது.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🙏 அன்பே சிவம் 🙏
🙏 அன்பே சிவமயம் 🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படி யொழுகுநாளிலே, ஒரு நாள், தமது வீட்டிலே திருவமுது செய்ய வந்த சிவனடியார்களெல்லாரையும் விதிமுறைப்படி திருவமுதுசெய்யத் தொடங்குவித்தற்கு, அவர்களை முன்பு அழைத்து, தமது மனைவியார் கரகநீர் வார்க்க அவர்களுடைய திருவடிகளை விளக்கும்பொழுது, அவர்களில், தம் வீட்டிற்கு சிவனடியார் கோலத்தில் வந்தவர் ஒருவர், தமக்கு ஏற்கனவே பணிவிடை (ஏவல் ஆளாக இருந்தவர், சொல்லாமல் வேலையை விட்டு சென்றவர்) செய்தவரையும், எவ்வித சஞ்சலமும் இல்லாமல், ("சிவனடி கோலத்தில் எவர் வந்தாலும் வருவது ஈசனே" என கருதி "சிவபக்தியையும் சிவநெறியையும், சிவதொண்டினையும் சிவ உணர்வோடு புரிபவர் ஸ்ரீ கலிக்கம்பர் ஆயிற்றே") வந்தது எம்பெருமான் சிவனே என மனதார தொழுது வழிபட்டார். அவருடைய திருவடிகளையும் விளக்கப்புகுந்தார். ஆனால், மனைவியார், இவர் ஒரு காலத்தில் தம் மனையில் நம்மிடம் பணிவிடை வேலைக்காரராக இருந்து போனவராயிற்றே என இனங்கண்டு கொண்டதனால், அதனை நொடிப்பொழுதில், சிந்தித்து, மனதளவில் மட்டுமே கரகநீர் வார்க்கத் தாழ்க்க, அதனை குறிப்பால் உணர்ந்து, அதுகண்டு இம்மியளவும் தாமதிக்காமல், "இவள் இந்தச் சிவனடியாருடைய முந்திய நிலையைக் குறித்து வெள்கி நீர் வாரா தொழிந்தாள்" என்று துணிந்து, தயங்கிய மனைவியின் கைகளை, தனது இடுப்பில் இருந்த உடை வாளால் சிறிதும் தயக்கமின்றி உடனேயே வெட்டினார் வணிகர் ஸ்ரீ கலிக்கம்பர். அக்கரக நீரை எடுத்து; தாமே அவருடைய திருவடிகளை விளக்கி, அத்தியந்த ஆசையோடு தாமே வேண்டுவனவெல்லாஞ் செய்து, அவ்வடியார்களைத் திருவமுது செய்வித்தார். திருத்தொண்டாக சிவத்தொண்டு பணியையும் தம்கைப்படவே நிறைவேற்றுவாராயினர்.
இவரின் கள்ளகபடமில்லா மேலான சிறந்த சிவ உணர்வை, சிவபக்தியை, சிவ நெறியை, சிவத்தொண்டினை மெச்சி, எல்லாம் வல்ல இறைவன், ரிஷபத்தின் மேல் தனது உமையவளோடு ஸ்ரீ சுடர்கொழுந்தீசனார் திருவருள் காட்சியை தம்பதியருக்கு அருளியதோடு, ஆட்கொண்ட திருவருளோடு, வெட்டுண்டு துண்டாகிய கலிக்கம்பரின் மனைவியின் திருக்கரங்களையும் உடனேயே மீண்டும் கிடைத்திட்ட பெரும்பேற்றினையும் அருள்பாலித்தார். தம்பதி அடியவர்கள் அம்பலவாணரின் அருட் தோற்றத்தைத் தரிசித்து, நிலமதில் வீழ்ந்து பணிந்தார்கள். கலிக்கம்பர் மனைவியோடு உலகில் நெடுநாள் வாழ்ந்து இனிய திருத்தொண்டுகள் பல புரிந்தார்.
மேலும் பெண்ணாடத்து திருத்தூங்கானைமாடம் "ஸ்ரீ சுடர்கொழுந்தீச நாதர்" என்கிற "ஸ்ரீ பிரளயகாலேசுவரர்" இறைவனும், "ஸ்ரீ கை வழங்கீசனார்" என பெயர் பெற்றார் என்பது தெய்வீக தலவரலாறு.
இவ்வாறு கள்ளம் கபடு இல்லா முழு மனதுடன் சிவ உணர்வோடு சிவ நெறியை தூய சிவ பக்தியை மனதில் என்றும் நிறுத்தி, திருஅமுது படைக்கும் திருத்தொண்டான சிவதொண்டினை தவறாமல் வாழ்வு முழுவதும் சிவனடியார்களுக்கு இவ்வாறு பல நாள் தொடர்ந்து சிவதொண்டாற்றித் சிவத்தொண்டின் வழிநின்று திருபெண்ணாவுகடத்திலேயே (பெண்ணாடம்) முக்திப்பேறு பாக்கியத்தைப் பெற்று சிவதிருவடிநிழலை அடைந்து பேரின்பம் பூண்டார் ஸ்ரீ கலிக்கம்பர்.
சிவத்தொண்டு செய்யும் பொழுது எத்தனை குறுக்கீடுகள் வந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாத வைராக்கிய மனம் கலிக்கம்பர்க்கு, சிவனுடைய பேரருளைப் பெற்றுத் தந்து குருவருள் புரியும் நாயனார் என்கிற உயரத்துக்கு உயர்த்தியது.
கலிக்கம்பரின் அன்பை, சிவ பக்தியை, சிவ நெறியை, சிவ உணர்வை, சிவத்தொண்டினை உலகுக்கு உணர்த்தவே, இத்தகைய திருவிளையாடல் நாடகத்தை அரங்கேற்றினார் எல்லாம் வல்ல இறைவன் ஸ்ரீ சிவபெருமான்.
சிவனடியார் நேசமுஞ் சிவதொண்டு வீறும் வாய்ந்த மகான்கள் இது காரியத்தில் மிகக் கண்டிப்பாகவே யிருப்பர். எவ்வகையிலேனும் அக்கணியம் அவமதிக்கப்படக்காணின் வன்முறையாலேனும் உண்மை சாதிக்கத் தவறமாட்டார். கலிக்கம்பநாயனார் இதற்குத் தக்க உதாரணமாவர்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
வெறித்த கொன்றை முடியார்தம்
அடியார் இவர்முன் மேவுநிலை
குறித்து வெள்கி நீர்வாரா
தொழிந்தாள் என்று மனங்கொண்டு
மறித்து நோக்கார் வடிவாளை
வாங்கிக் கரகம் வாங்கிக்கை
தறித்துக் கரக நீரெடுத்துத்
தாமே அவர்தாள் விளக்கினார்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
- பெரியபுராணம் / தெய்வச்சேக்கிழார் பெருமான்
- "விளக்கி அமுது செய்வதற்கு வேண்டுவன தாமே செய்து துளக்கில் சிந்தையுடன் தொண்டர் தம்மை யமுது செய்வித்தார் அளப்பில் பெருமை யவர்பின்னும் அடுத்த தொண்டின் வழிநின்ற களத்தில் நஞ்ச மணிந்தவர்தாள் நிழற்கீ ழடியா ருடன்கலந்தார்" என வந்துள்ளவாறு காண்க.
![]() |
ரிஷபத்தின் மேல் தனது உமையவளோடு ஸ்ரீ சுடர்கொழுந்தீசனார் திருவருள் காட்சியை தம்பதியருக்கு தந்து, ஆட்கொண்ட திருவருளோடு, வெட்டுண்டு துண்டாகிய கலிக்கம்பரின் மனைவியின் திருக்கரங்களையும் மீண்டும் அருளும் பழங்கால சிற்பக் காட்சிகள் 👆👇 | Photo Courtesy: சோழர் சரித்திர ஆய்வு மையம். பதிவு எண் 34/2017 |
இரண்டாம் இராசராசனாற் (கி.பி. 1146-1173-இல்) கட்டிய இராசராசபுரத்துக் (தாராசுரம்) கோவிலில் உள்ள சிவபிரான் இறையிடப் புறச் சுவர்களில் நாயன்மார் வரலாறுகள் சிற்பங்கள் வாயிலாகக் காட்சி அளிக்கின்றன. ஒவ்வொரு சிற்பத்தின் கீழும் நாயன்மார்கள் நிகழ்ச்சி எழுதப்பட்டுள்ளது.
தாராசுரம் ஐராவதேசுவரர் சிவன் கோவில் மேற்புறச் சுவரில் உள்ள நாயன்மார்கள் சிற்பங்கள் கல்வெட்டுகள் வரிசையில்,
கலிக்கம்பரின் வரலாற்றை பின்வருமாறு பிரதிபலிக்கும் வகையில் சிற்பங்கள் கல்வெட்டுகள் அமைந்துள்ளது. (மேலே உள்ள படம் 👆👇)
வைத்துக் கால் விளக்கல் -
திரும்பி மனைவி கையை வெட்டுதல் -
பின்புறம் இறைவர் உமையவளுடன் காட்சி தருதல் -
முதற்கண் உருவாகிய அறுபத்து மூவர் வடிவங்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் ஐராவதேசுவரர் திருக்கோயிலில் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் அஞ்சலட்டை ஒளிப்படம் (Post Card) போல அழகுற வடிக்கப்பட்டிருக்கின்றன; பெயர்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் நாயன்மார் சிற்பங்கள் அனைத்தும் திருத்தொண்டர் புராணத்தின் பழமையையும், பெருமையையும் காட்டுகின்றன. நாயன்மார்களின் உன்னத வாழ்க்கை நிகழ்ச்சிகள் வடிக்கப்பட்ட சொல்லோவியம் கல்லோவியமாக இந்தப் புடைப்புச் சிற்பங்கள் காட்சி தருகின்றன. இவை வழிபாட்டில் இல்லை; வரலாற்றை மட்டுமே விளக்குகின்றன.
தாராசுரத்தில் உள்ள அறுபத்துமூவர் சிற்பங்கள் திருச்சுற்று மண்டபத்தின் உள்பக்கப் பகுதியில் அடித்தளத்தில் செதுக்கப்பட்டிருக்கின்றன. கோயில் திருச்சுற்று முழுவதும் இவை அமைந்துள்ளன. அனைத்தும் ஒரே அளவின. இத்தகைய சிற்பங்களைப் பிற்காலக் கோயில் கட்டிடக்கலையில் காணமுடியவில்லை.
சுந்தரர் அருளிச் செய்த திருத்தொண்டத் தொகை வரிசையில் அமைந்த நாயன்மார்கள் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு குறுஞ்சிற்பங்களாக தில்லை வாழ் அந்தணர் தொடங்கி இசைஞானியர் வரை, நாயன்மார்கள் ஒவ்வொருவரையும் பெருமான் தனித்தனி வழியில் ஆட்கொண்ட முறையை கண கச்சிதமாக பார்க்கும் பொழுது விழிப்பாவை விரிவடையும் என்றால் அது மிகையாகாது.
![]() |
| சிற்பம்: கலிக்கம்பர் நாயனார் புராண சிற்பம், திருநாவலூர் எம்பிரான் நம்பி ஆரூரர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமடம் 👆 |
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
" கலிக்கம்ப நாயனார் புராணம் "
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
☘️☘️☘️☘️☘️
*தொகை*
☘️☘️☘️☘️☘️
“கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் (கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோன்) அடியார்க்கு மடியேன்”
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
- *திருத்தொண்டத் தொகை* (07.039 - பாடல் 07)
- *சுந்தரமூர்த்தி சுவாமிகள்*
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
{தொகை: மனைவியினது கையினைத் தடிந்த, வரிவில் ஏந்திய கலிக்கம்ப நாயனாரின் அடியார்க்கும் நான் அடியேனாவேன்.
கைதடிந்த - மனைவியினது கையினை வெட்டிய; மனைவியினது என்பது சரித வரலாற்றினின்றும், வகைநூல் விரிநூல்களினின்றும் வருவிக்கப்பட்டது. வரிசிலையான் - விற்பிடித்த வீரனாகிய; வரிசிலை - வரிந்து கட்டப்பட்ட வில்லை.}
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
☘️☘️☘️☘️
*வகை*
☘️☘️☘️☘️
பொய்யைக் கடிந்துநம் புண்ணியர்க்
காட்பட்டுத் தன்அடியான்
சைவத் திருவுரு வாய்வரத்
தான்அவன் தாள்கழுவ
வையத் தவர்முன்பு வெள்கிநீர்
வாரா விடமனைவி
கையைத் தடிந்தவன் பெண்ணா
கடத்துக் கலிக்கம்பனே.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
- *திருத்தொண்டர் திருவந்தாதி* (12.03.54 - பாடல் 1179)
- *நம்பியாண்டார் நம்பி*
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
{வகை: பொய்யை.....ஆட்பட்டு - பொய்யினை நீக்கி நமது புண்ணியராகிய சிவபெருமானுக்கு ஆளாகி; தன்னடியான்...கழுவ - தமது அடியவன் சைவ தவவேடந்தாங்கி வரத் தாம் அவரது கால்களைக் கழுவுதற்கு; வையத்தவர்.... நீர் வாராவிட - உலகியல் நிலையின் உலகமக்களின் முன்னே வெள்கி மனைவி நீர் வார்க்காது விட; மனைவி ....தடிந்தவன் - மனைவியினது கையைத் தடிந்தவர்; பெண்ணாகடத்துக் கலிக்கம்பனே - பெண்ணாகடத்தில் வாழும் கலிக்கம்பரே. யாவர்.}
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
" கலிக்கம்பநாயனார் *புராணசாரம்* "
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
கடவுளருட் கண்ணார்கள் பயிலுந் தொல்லைக்
கடந்தைநகர் வணிகர்கலிக் கம்பர் அன்பர்க்கு
அடிமையுற அமுதளிப்பார் அடியான் நீங்கி
அருளுருவாய் அன்பருடன் அணைய ஏத்தி
இடையிலவர் அடியணையும் விளங்கோ நிற்ப
இகழ்மனைவி கரகமலி இரண்டு கையும்
படியில்விழ எறிந்துஅவள்செய் பணியுந் தாமே
பரிந்துபுரிந்து அரன்அருளே பற்றி னாரே.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
- “திருத்தொண்டர்புராணப் பயன்“ என்னும் "திருத்தொண்டர் புராணசாரம்" (பாடல் - 49)
- கொற்றவன்குடி - "உமாபதி சிவாச்சாரியார்"
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
"கலிக்கம்பநாயனார் புராணசார விளக்கம்"
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
இ-ம். கலிக்கம்பநாயனார், நடுநாட்டிலே திருப்பெண்ணாகடத்தில் வணிக வைசியகுலத்தில் அவதரித்தவர். இவர், அங்குள்ள திருத்தூங்கானைமாட மென்னும் திருக்கோயிலில் திருத்தொண்டுகள் செய்பவர். அத்தொண்டெல்லாம், சிவனடியார் திருத்தொண்டும் உடன்புரிந்தாற்றான் பயனைத்தருமென்னு முண்மையுணர்ந்தவராதலால், சிவனடியார்க்கு அமுதளித்தலாகிய மாகேசுரபூசனையும் தினந்தோறுஞ் செய்துவருவார். ஒருநாள் வழக்கப்படி பத்திநியார் கரகநீர் வார்க்க அடியார் பாதம் விளக்கிப் பூசித்துவரும்சமயம், முன்பு தம்மனையில் வேலைசெய்துவிலகிய ஒருவர் சிவவேடம் பூண்டுவர அவர் பாதம் விளக்கப்புகும் போது, பத்திநியார் அவரது முன்னைநிலை நோக்கிச் சிறிது தாமதித்தனர். கலிக்கம்பர் அவர் கையைத்தடிந்து தாமே பூசித்து யாவர்க்கும் அமுதுசெய்வித்தனர். இத்திருத்தொண்டுகளையேநெடுநாட்செய்துவந்து சிவபதநிழலில் புகுந்து சிவனடியாருடன் பேரின்புற்று வாழ்ந்தனர்.
குறிப்பு:- இவர் சிவனடியாரிடத்துத் தாழ்வு நோக்காது சிவவேடமே நோக்கி வழிபடுமுறையுணர்த்தியுய்விக்கலந்தருளிய சிவவர்க்கப்பெருஞ்செல்வரென்க. திருச்சிற்றம்பலம்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
"கலிக்கம்ப நாயனார் துதிப்பா"
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
இந்த ஓரடியர் முன்பு நம்பணி செய்
ஏவ லாளரென எண்ணியே
சிந்தை யோசனையில் அடியர் கால்கழுவ
சிறிது தன்மனைவி தாழ்த்தலும்
நொந்து தன்மனைவி கைதடிந் தடியர்
கால் விளக்கியநு ணறிவினர்
எந்தை தூயர்கலிக் கம்பர்சீ ரடியை
என்று மேதொழுது வாழ்த்துவாம்
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
- "அறுபத்து மூவர் துதிப்பா" (பாடல் - 42)
- தணிகைமணி, ராவ்பகதூர் வ (வடக்குப்பட்டு). சு (சுப்பிரமணிய) செங்கல்வராய பிள்ளை
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
🌟🌟🌟🌟🌟🌟🌟
துதிப்பா கருத்து:
🌟🌟🌟🌟🌟🌟🌟
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
வந்த அடியார்களை உபசரித்துக் கால் கழுவும் போது, ஓரடியாரைக் கண்டு இவர் முன் நம்மிடம் வேலையாளாய் இருந்தவரல்லவா என்று சிந்தித்துத் தம் மனைவி சிறிது தாழ்க்கக் கோபங் கொண்டு மனைவியின் கையைத் தடிந்து அந்த அடியாரின் பாதத்தைத் தாமே விளக்கிய தூயராம் கலிக்கம்பர் பாதத்தைத் தொழுது வாழ்த்துவாம்.
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
கலிக்கம்ப நாயனார் - திருக்கடந்தைப் புராணம்
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
“செய்ய திருக்கடந்தையினில் வணிகர் தங்கள்
திருமரபில் அவதரித்துச் சிவனைநாடி
மெய்யடியார்க் கமுதளிப்பார் பண்டுதம் பால்
வினையேவல் செய்யொருவர் மேவக்கண்டு
துய்யதாள் விளக்குதற்கு நீர்விடாத
துணைவிகரந்தனைத் துணித்துத் துணிந்துதாமே
கையதனாலுபசரித்துக் கயிலை சேர்ந்த
கலிக்கம்பர் பதமலரைக் கருதுவோமே.”
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
- திருக்கடந்தைப் புராணம் (பாடல் -03)
- சிவஞானப்பிள்ளை பிரான்
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
திருக்கடந்தைப் புராணம் கருத்து:
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
திருப்பெண்ணாகடத்தில் மேன்மையான வணிகர் குல வாணியர் மரபில் அவதரித்து, எல்லாம் வல்ல சிவபெருமானின் பேரருளை பெற்றிட, சிவனடி கோலத்தில் எவர் வந்தாலும் சிவபெருமானாகவே கருதி வரும் மெய்யன்பர்களுக்கு, திருஅமுது திருத்தொண்டாகிய சிவத்தொண்டினை செய்து வரும்போது, ஏவல் பணியாளே இருந்தவரேனும் சிவனடியாராக வரக்கண்டு, வந்தவரை சிவனாகவே கருதிய உன்மத்த நிலையில், நீர் வார்க்கத் தாமதித்த மனைவியின் கையை வெட்டியதோடு, அடியார் திருவடியைத் தாமே விளக்கி அமுதூட்டுவதற்கு வேண்டிய ஏனைய செயல்களை எல்லாம் தனது கைகளாலே செய்து சலனமில்லாத சிந்தையுடன் அவர்களுக்குத் திருவமுதூட்டினார். இவ்வாறு பல நாள் சிவதொண்டாற்றித் கயிலாயத்தில் வீற்றிருக்கும் எம்பெருமான் சிவதிருவடிநிழலை அடைந்த கலிக்கம்பரின் பாதமலரை தொழுவோமே.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
கலிக்கம்ப நாயனார்- "திருத்தொண்டர் வெண்பா"
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
திருத்தொண்டர் வெண்பா கருத்து:
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
- திருத்தொண்டர் வெண்பா (3270)
- கலிக்கம்ப நாயனார் (44/72)
- இதனை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. நாரையூர் ஊரில் வாழ்ந்தவர்
சித்தாந்தசரபம் - அஷ்டாவதானம், பூவை. கலியாண சுந்ததர முதலியாரவர்கள்
மாணாக்கர் , பண்டிதரத்தினம், புழலை. திருநாவுக்கரசு முதலியாரால் பார்வையிடப்பட்டு,
இவரது மாணாக்கர் புழலை. மாணிக்கவேலு முதலியாரால் தம் பொருட்செலவில், சென்னை, பண்டிதமித்ததிர அச்சகத்தில் 1906 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. புழலை என்பது சென்னையை அடுத்துள்ள புழல்.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
*பெரியபுராணம்*
*அருளியவர்:* தெய்வச்சேக்கிழார் எம்பெருமான்
*திருமுறை :* பன்னிரண்டாம் திருமுறை - பெரியபுராணம்
*சிறப்பு:* திருத்தொண்டர் புராணம் - இரண்டாம் காண்டம் - 8.) பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - 12.050 கலிக்கம்ப நாயனார் புராணம் (8.05) (பாடல் 4012 முதல் பாடல் 4021 ஆக மொத்தம் 10 பாடல்கள்)
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
உரிமை ஒழுக்கம் தலை நின்ற உயர்
தொல் மரபில் நீடு மனைத்
தரும நெறியால் வாழ் குடிகள்
தழைத்து வளரும் தன்மையதாய்
வரும் மஞ்சு உறையும் மலர்ச் சோலை
மருங்கு சூழ்ந்த வளம் புறவில்
பெருமை உலகு பெற விளங்கும்
மேல் பால் பெண்ணாகட மூதூர். 8.5.1 (பாடல் 4012)
{பொழிப்புரை:
தமக்கு உரிய நல்லொழுக்கத்தில் சிறந்த உயர்ந்த பழைமையான மரபில், நிலைபெறுகின்ற இல்லற நெறியில் வாழ்கின்ற குடிகள் தழைத்தோங்கும் இயல்புடையதாகி, வானில் நிலவும் மேகங் கள் தங்குதற்கு இடனான அழகிய சோலைகள் பக்கங்களில் சூழ்ந்து நிற்கும் வளமுடைய புறம் பணைகளுடன், உலகம் பெருமை பொருந்த விளங்குவது, நடுநாட்டின் மேற்குத் திசையில் உள்ள `பெண்ணாகடம்' என்னும் பழைய ஊர் ஆகும்.}
மற்றப் பதியினிடை வாழும் வணிகர்
குலத்து வந்து உதித்தார்
கற்றைச் சடையார் கழற்காதலுடனே
வளர்ந்த கருத்து உடையார்
அற்றைக்கு அன்று தூங்கானை
மாடத்து அமர்ந்தார் அடித்தொண்டு
பற்றிப் பணி செய் கலிக்கம்பர்
என்பார் மற்றோர் பற்று இல்லார். 8.5.2 (பாடல் 4013)
{பொழிப்புரை:
அப்பதியில் வாழ்கின்ற வணிகர் குலத்தில் வந்து தோன்றியவர்; தொகுதியான சடையையுடைய சிவபெருமானின் திருவடிகளில் கொண்ட பெருவிருப்பம் தம் உள்ளத்தே தோன்றி வளரும் வளர்ச்சியுடன் வாழ்பவர்; அவர் அவ்வந்நாளும் அப்பதியில் `திருத்தூங்கானை' மாடத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் திருவடித் தொண்டில் ஈடுபட்டுப் பணிசெய்து வருபவர். `கலிக்கம்பர்' என்னும் பெயர் உடையவர். அவர் இறைவனின் திருவடிப்பற்று அன்றி வேறொரு பற்றும் இல்லாதவர்.}
ஆன அன்பர் தாம் என்றும்
அரனார் அன்பர்க்கு அமுது செய
மேன்மை விளங்கு போனகமும் விரும்பு
கறி நெய் தயிர் தீம் பால்
தேனின் இனிய கனி கட்டி
திருந்த அமுது செய்வித்தே
ஏனை நிதியம் வேண்டுவன
எல்லாம் இன்பமுற அளிப்பார். 8.5.3 (பாடல் 4014)
{பொழிப்புரை:
அத்தகைய அன்பர், என்றும் சிவனடியார்களுக்கு அமுது செய்தற்குரிய மேலாய திருவமுதுடன், விரும்பும் கறி வகைகளும், நெய்யும், தயிரும், இனிய கட்டியாகக் காய்ச்சிய பாலும், தேனை விட இனிய பழங்களும், கரும்புக் கட்டியும் என்னும் இவை முதலானவற்றைப் படைத்து, நிறைவாக அவர்கள் உண்ணும் படியாய்ச் செய்வித்து, மேலும் வேண்டிய பிற நிதியங்கள் எல்லாவற்றையும் இன்பம் பொருந்த அளித்து வருவார்.}
அன்ன வகையால் திருத்தொண்டு புரியுநாளில்
அங்கு ஒரு நாள்
மன்னும் மனையில் அமுது செய
வந்த தொண்டர் தமை எல்லாம்
தொன்மை முறையே அமுது செயத்
தொடங்கு விப்பார் அவர் தம்மை
முன்னர் அழைத்துத் திருவடிகள்
எல்லாம் விளக்க முயல்கின்றார். 8.5.4 (பாடல் 4015)
{பொழிப்புரை:
அவ்வகையில் தொண்டு செய்து வரும் நாள்களில், ஒரு நாள், நிலைபெற்ற தம் திருமனையில் அமுது செய்யவந்த தொண்டர்களை எல்லாம் வழிவழியாகச் செய்துவரும் முறையில் அமுது செய்யத் தொடங்குவிப்பாராகி, அவர்களை முன் அழைத்து, அவர்களின் திருவடிகளை எல்லாம் விளக்க முயல்வாராய்,}
திருந்து மனையார் மனை எல்லாம்
திகழ விளக்கிப் போனகமும்
பொருந்து சுவையில் கறி அமுதும்
புனிதத் தண்ணீருடன் மற்றும்
அருந்தும் இயல்பில் உள்ளனவும்
அமைத்துக் கரக நீர் அளிக்க
விரும்பு கணவர் பெருந்தவர் தாள்
எல்லாம் விளக்கும் பொழுதின் கண். 8.5.5 (பாடல் 4016)
{பொழிப்புரை:
மனைவியார் அவ்வில்லம் முழுதும் விளக்கம் பெறச்செய்து திருவமுதும், பொருந்தும் முறைமையில் கறியமுதும், தூய்மையான நீரும் என்றும் இவற்றுடனே உண்பார்க்கேற்ற வகையில் உளவாகும் பிற பொருள்களையும் செம்மை பெற அமைத்துக் கரகத்தில் நீரை வார்க்க, விரும்பும் நிலையில் கணவர் தம்மில்லத்தில் வரும் அடியவர்களின் திருவடிகளையெல்லாம் விளக்கி வரும் போது,}
முன்பு தமக்குத் தொழில் செய்யும்
தமராய் ஏவல் முனிந்து போய்
என்பும் அரவும் அணிந்த பிரான்
அடியார் ஆகி அங்கு எய்தும்
அன்பருடனே திருவேடம் தாங்கி
அணைந்தார் ஒருவர் தாம்
பின்பு வந்து தோன்ற அவர்
பாதம் விளக்கும் பெருந் தகையார். 8.5.6 (பாடல் 4017)
{பொழிப்புரை:
முன்னைய நாள்களில் தமக்குத் தொண்டு செய்யும் சுற்றமாக இருந்த ஒருவர், பின் ஏவற்பணியை வெறுத்துச் சென்று, எலும்பையும் பாம்பையும் அணிந்த பெருமானின் அடியாராகி, அங்கு வரும் அடியார்களுடன் ஒருவராக வந்து தோன்ற, அவர் அடிகளை விளக்கும் பெருந்தகையாரான கலிக்கம்பரும்,}
கையால் அவர் தம் அடி பிடிக்கக்
காதல் மனையார் முன்பு ஏவல்
செய்யாது அகன்ற தமர் போலும்
என்று தேரும் பொழுது மலர்
மொய்யார் வாசக் கரக நீர்
வார்க்க முட்ட முதல் தொண்டர்
மையார் கூந்தல் மனையாரைப்
பார்த்து மனத்துள் கருதுவார். 8.5.7 (பாடல் 4018)
{பொழிப்புரை:
கைகளால் அவர்தம் அடிகளைப் பிடிக்க `முன்பு நம் ஏவலைச் செய்யாது விட்டுச் சென்ற சுற்றம் இவர் போலும்!' என்று அன்பு மனைவியார் நினைத்த அளவில், மலர்கின்ற மலர்களை யுடைய கரக நீரை வார்க்கக் காலம் தாழ்க்க, முதன்மை பெற்ற திருத்தொண்டரான அவர், கரிய கூந்தலையுடைய மனைவியின் செயலைப் பார்த்துத், தம் மனத்தில் கருதுவாராய்,}
வெறித்த கொன்றை முடியார் தம் அடியார்
இவர் முன் மேவு நிலை
குறித்து வெள்கி நீர் வாராது
ஒழிந்தாள் என்று மனம் கொண்டு
மறித்து நோக்கார் வடிவாளை
வாங்கிக் கரகம் வாங்கிக் கை
தறித்துக் கரக நீர் எடுத்துத்
தாமே அவர் தாள் விளக்கினார். 8.5.8 (பாடல் 4019)
{பொழிப்புரை:
மணம் கமழும் கொன்றை மலரை அணிந்த திருச் சடையையுடைய இறைவரின் அடியவரான இவர், முன்பு இருந்த நிலைகுறித்து, அவர் திருவடியை விளக்க நாணி நீர் வார்க்காது விட்டார் என்று மனத்தில் எண்ணி, மீண்டும் அவர் முகத்தையும் பார்க்காமல், கூர்மையான வாளை உருவி, அவர் கையிலிருந்த கரகத்தை வாங்கிப் பின், அவரது கையை வெட்டித் துண்டாக்கி, கரகத்தை எடுத்து நீர் வார்த்துத் தாமே அவருடைய கால்களை விளக்கினார்.}
விளக்கி அமுது செய்வதற்கு
வேண்டுவன தாமே செய்து
துளக்கில் சிந்தையுடன் தொண்டர்
தம்மை அமுது செய்வித்தார்
அளப்பில் பெருமை அவர் பின்னும்
அடுத்த தொண்டின் வழி நின்று
களத்தில் நஞ்சம் அணிந்து அவர்
தாள்நிழல் கீழ் அடியாருடன் கலந்தார். 8.5.9 (பாடல் 4020)
{பொழிப்புரை:
அங்ஙனம் விளக்கிய பின்பு, அவர் உணவு உண்பதற்கு வேண்டிய ஏனைய செயல்களை எல்லாம் தாமே செய்து, அசைவற்ற மனநிலையுடன் அத்தொண்டரை அமுது செய்வித்தார். அளவற்ற பெருமையுடைய அவர், பின்பும் தமக்குப் பொருந்திய அத் திருத்தொண்டின் வழியில் வழுவாது ஒழுகிக், கழுத்தில் நஞ்சை யுடைய இறைவரின் திருவடி நீழலின்கீழ்க் குலவி நிற்கும் அடியாருடன் கலந்து பேரின்பம் பெற்றார்.}
ஓத மலிநீர் விடம்
உண்டார் அடியார் என்றுணரா
மாதரார் கை தடிந்த கலிக்
கம்பர் மலர்ச் சேவடி வணங்கி
பூத நாதர் திருத்தொண்டு
புரிந்து புவனங்களில் பொலிந்த
காதல் அன்பர் கலிநீதியார்
தம் பெருமை கட்டுரைப்பாம். 8.5.10 (பாடல் 4021)
{பொழிப்புரை:
குளிர்ந்த பெருகிய நீர் பொருந்திய கடலில் எழுந்த நஞ்சையுண்ட இறைவரின் அடியவரது திருவேடத்திற்குரிய பெருமை இதுவென்று உணராத மனைவியாரின் கையை வெட்டிய கலிக்கம்ப நாயனாரின் மலர் போன்ற அடிகளை வணங்கி, சிவகணங்களின் தலைவரான சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்து எவ்வுலகத்தும் விளங்கும் பெரும் பத்திமையுடைய அன்பரான `கலிய நாயனாரின்' பெருமையை உரைப்பாம்.}
🌷 கலிக்கம்ப நாயனார் புராணம் முற்றிற்று. 🌷
-🙏🙏🙏🙏🙏-
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🙏 திருச்சிற்றம்பலம் 🙏
🙏 ஓம் நமசிவாய 🙏
🙏 அன்பே சிவம்🙏
🙏 சர்வம் சிவார்ப்பணம்🙏
🙏திருப்பெண்ணாவுகடம், எம்பெருமாட்டி காக்கும் நாயகி 'ஸ்ரீ கடந்தை நாயகியாம்', 'ஸ்ரீ அழகிய காதலி அம்மன்' என்கிற 'ஶ்ரீ ஆமோதனாம்பாள்' உடனுறை எம்பெருமான் ஸ்ரீ கடந்தை நாயகராம், 'ஶ்ரீ கைவழங்கீசனார்' என்கிற 'ஶ்ரீ பிரளயகாலேசுவரர்' என்கிற 'ஸ்ரீ சுடர்கொழுந்தீசர்' என்கிற 'ஸ்ரீ தூங்கானைமாடத்து நாதர்' போற்றி போற்றி!🙏
🙏 ஸ்ரீ அன்பிற்பிரியாள் அம்மன் தாயே போற்றி! 🙏
🙏 மங்கள தேவி ஸ்ரீ கண்ணகி அம்மன் தாயே போற்றி! 🙏
🙏 வணிகர் குல நாயன்மார்கள் அறுவர் திருவடிகளே சரணம்! 🙏
🙏 எம்பிரான் ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் திருவடிகளே சரணம்! 🙏
🙏 எம்பிரான் ஶ்ரீ மெய்கண்டார் திருவடிகளே சரணம்!🙏
🙏எம்பிரான் ஶ்ரீ சிவ மறைஞான சம்பந்தர் திருவடிகளே சரணம்! 🙏
என்றென்றும் எம்பிரான் ஸ்ரீ கலிக்கம்பர் வழியின் சிவத்தொண்டில், சிவபக்தியில், சிவநெறியில், சிவ உணர்வில், இறைப்பணிகளில், சமயப்பணிகளில் மற்றும் சமுதாயப்பணிகளில்,
அடியார்க்கும் அடியேன்,
இவண்,
13/7, #கிழக்கு ராஜ வீதி,
#பெண்ணாடம்_அஞ்சல்,
#அஞ்சல்_குறியீடு - 606 105
#திட்டக்குடி_வட்டம்,
#கடலூர்_மாவட்டம்,
#தமிழ்நாடு_மாநிலம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பெண்ணாடம் ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் மடாலயம் திருக்கோயில் - இணைப்பு / வழி / பாதை விவரம் - தகவல் (Connectivity / Route / Paths - Details Information)
பெண்ணாடம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 350 மீட்டர் தொலைவிலும், பெண்ணாடம் ரயில் நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவிலும், திட்டக்குடியிலிருந்து 15 கிமீ தொலைவிலும், விருத்தாசலத்திலிருந்து 18 கிமீ தொலைவிலும், விருத்தாசலம் இரயில்வே (ஜங்ஷன்) சந்திப்பிலிருந்து இருந்து 21 கிமீ தொலைவிலும், ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து 23 கிமீ தொலைவிலும், தொழுதூரில் இருந்து 29 கிமீ தொலைவிலும், நெய்வேலியிலிருந்து 34 கிமீ தொலைவிலும், உளுந்தூர்பேட்டையில் இருந்து 39 கி.மீ., சேத்தியாத்தோப்பில் இருந்து 42 கி.மீ., குறிஞ்சிப்பாடியில் இருந்து 48 கி.மீ., கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்து 50 கி.மீ., சிதம்பரத்தில் இருந்து 60 கி.மீ., கடலூரில் இருந்து 78 கி.மீ., புதுச்சேரியில் இருந்து 97 கி.மீ., திருச்சியில் இருந்து 106 கி.மீ., திருச்சி விமான நிலையத்திலிருந்து 114 கி.மீ. சென்னையிலிருந்து 257 கி.மீ தொலைவிலும் பெண்ணாடம் ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் மடாலயம் திருக்கோயில் அமைந்துள்ளது.
இம்மடாலய திருக்கோயில் விருத்தாசலம் - திட்டக்குடி - தொழுதூர் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு இரு முனைகளிலிருந்தும் அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. தென்னக ரயில்வேயின் விருத்தாசலம் - திருச்சிராப்பள்ளி பிரிவில் பெண்ணாடம் இரயில் நிலையம் அமைந்துள்ளது. பெண்ணாடம் இரயில் நிலையம் கோயிலில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் உள்ளது. அருகிலுள்ள பெரிய ரயில் நிலையம் / சந்திப்பு விருத்தாசலத்தில் (21 கிமீ) அமைந்துள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் புதுச்சேரி (97 கிமீ), திருச்சி (114 கிமீ) மற்றும் சென்னையில் (257 கிமீ) அமைந்துள்ளது.
பெண்ணாடம் ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் மடாலயம் திருக்கோயில் - இருப்பிடம் (Location)
![]() |
A1 - "ஆதிக்கு ஆதி" ஸ்ரீ கலிக்கம்ப நாயனார், -நாயன்மார்கள் சன்னதி- (வினைத்தீர்த்த விநாயகர் சன்னதி அருகில்) |
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
உ
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!!
"சிவமயம்"
"திருச்சிற்றம்பலம்"
"அன்பே சிவம்"
"எம்பெருமாட்டி, காக்கும் நாயகி 'ஸ்ரீ கடந்தை நாயகி' என்கிற 'ஸ்ரீ அழகிய காதலி அம்மன்' என்கிற 'ஶ்ரீ ஆமோதனாம்பாள்' உடனுறை எம்பெருமான் ஸ்ரீ கடந்தை நாயகராம், 'ஶ்ரீ கைவழங்கீசனார்' என்கிற 'ஶ்ரீ பிரளயகாலேசுவரர்' என்கிற 'ஸ்ரீ சுடர்கொழுந்தீசர்' என்கிற 'ஸ்ரீ தூங்கானைமாடத்து நாதர்' துணை"
"ஸ்ரீ அன்பிற்பிரியாள் அம்மன் துணை"
“ஸ்ரீ மங்கள தேவி கண்ணகி அம்மன் துணை”
“வணிகர் குல நாயன்மார்கள் அறுவர் துணை”
"எம்பிரான் ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் துணை"
எம்பிரான் ஶ்ரீ மெய்கண்டார் துணை"
எம்பிரான் ஶ்ரீ சிவ மறைஞான சம்பந்தர் துணை"
"கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் அடியார்க்கும் அடியேன்!"
🗣️📣 -அறிவிப்பு எச்சரிக்கை- 🔔
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெண்ணாடம் - 606 105, பெண்ணாடம் கிழக்கு ராஜ வீதி, வணிக வைசிய (வாணியர் செட்டியார்கள்) சமூகத்துக்கு சொந்தமான, ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் மடாலயம் ஆனது,
ஸ்ரீ கலிக்கம்ப நாயனாரின் குல வழித்தோன்றல்களாகிய, வணிக வைசிய (வாணியர் செட்டியார்கள்) சமூகத்தார்களின் சட்டப்படியான நிர்வாகத்தைத் தவிர, இதே பெயரிலோ அல்லது வேறு பெயர்களிலோ, அமைப்பாகவோ, பேரவையாகவோ, திருக்கூட்டமாகவோ, தனிநபராகவோ, குழுவாகவோ, மேலும் பல்வேறுவிதமான பெயர்களிலோ இனங்களாகவோ அமைப்புகளாகவோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ செயல்படக் கூடாது, இது சட்டப்படி குற்றமாகும். நன்கொடைகள், காணிக்கைகள், திருப்பணி நன்கொடைகள், கைங்கர்ய உபயங்கள், பொருளுதவிகள் வசூலிக்க யாருக்கும் உரிமையோ அனுமதியோ வழங்கப்படவில்லை என்பது இதன்மூலம், தெரிவிக்கப்படுகிறது. யாரேனும் மீறினால் சட்டப்பூர்வ கடுமையான நடவடிக்கைக்கு உட்படுவீர்கள் மற்றும் இது சட்டப்படி கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும் என எச்சரிக்கை செய்யப்படுகிறது. இந்த எச்சரிக்கை அறிவிப்பினை மீறுவோர் காவல் துறை வசம் ஒப்படைத்து தண்டிக்கப்படுவீர்கள்.
ஸ்ரீ கலிக்கம்பர் நாயனார் மடாலயத்திற்கு, நன்கொடைகள், காணிக்கைகள், திருப்பணிகள், கைங்கர்ய உபயங்கள், பொருளுதவிகள், தினசரி நித்திய நைவேத்தியம் பூஜைகள், மாதாந்திர சஷ்டி, கிருத்திகை & சதுர்த்தி பூஜைகள், மாதாந்திர ரேவதி & தை ரேவதி ஸ்ரீ கலிக்கம்பரின் திருநட்சத்திர குருபூஜைகள் மற்றும் ஸ்ரீ கலிக்கம்பரின் சிவத்தொண்டான திருஅமுது படைத்தல் (அன்னம் பாலிப்பு - அன்னதானம்) ஆகிய ஆன்மீக நிகழ்வுகளுக்கு நன்கொடை செலுத்த விரும்புவர்கள் நிர்வாகத்தினரிடம் செலுத்தி உரிய இரசீது பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் மடாலய நிர்வாகத்தின் வங்கி கணக்கிலும் நேரிடையாகவும் நன்கொடைகளை செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு மடாலய நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும்.
நீங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் 1961ன் கீழ் 12A, 80C மற்றும் 80G வரி விலக்கு அளிக்கப்படும்.
-திருச்சிற்றம்பலம்-
-ஓம் நமசிவாய-
-அன்பே சிவம்-
-சர்வம் சிவார்ப்பணம்-
-எம்பெருமாட்டி, காக்கும் நாயகி 'ஸ்ரீ கடந்தை நாயகி' என்கிற 'ஸ்ரீ அழகிய காதலி அம்மன்' என்கிற 'ஶ்ரீ ஆமோதனாம்பாள்' உடனுறை எம்பெருமான் ஸ்ரீ கடந்தை நாயகராம், 'ஶ்ரீ கைவழங்கீசனார்' என்கிற 'ஶ்ரீ பிரளயகாலேசுவரர்' என்கிற 'ஸ்ரீ சுடர்கொழுந்தீசர்' என்கிற 'ஸ்ரீ தூங்கானைமாடத்து நாதர்' போற்றி! போற்றி!!-
-ஸ்ரீ அன்பிற்பிரியாள் அம்மன் தாயே போற்றி-
-மங்கள தேவி ஸ்ரீ கண்ணகி அம்மன் தாயே போற்றி-
-வணிகர் குல நாயன்மார்கள் அறுவர் திருவடிகளே சரணம்-
-எம்பிரான் ஸ்ரீ கலிக்கம்பரின் திருவடிகளே சரணம்-
-எம்பிரான் ஶ்ரீ மெய்கண்டார் திருவடிகளே சரணம்-
-எம்பிரான் ஶ்ரீ சிவ மறைஞான சம்பந்தர் திருவடிகளே சரணம்-
என்றென்றும் எம்பிரான் ஸ்ரீ கலிக்கம்பர் வழியின் சிவத்தொண்டில், சிவ பக்தியில், சிவ நெறியில், சிவ உணர்வில், இறைப்பணிகளில், சமயப்பணிகளில் மற்றும் சமுதாயப்பணிகளில்,
அடியார்க்கும் அடியேன்,
இவண்,
எம்பிரான் ஸ்ரீ கலிக்கம்ப நாயனாரின் குல வழித்தோன்றல்களாகிய வணிக வைசிய (வாணியர் செட்டியார்கள்) சமூக நிர்வாகத்தினர்,
ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் மடாலயம் & பெண்ணாடம் வணிக வைசிய சங்கம்,
13/7, கிழக்கு ராஜ வீதி,
பெண்ணாடம் அஞ்சல்,
அஞ்சல் குறியீடு – 606 105
திட்டக்குடி வட்டம்,
கடலூர் மாவட்டம்,
தமிழ் நாடு மாநிலம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏











.jpeg)











Comments
Post a Comment