"குரு" வழிபாட்டின் அவசியங்களும் தேவைகளும் முக்கியதுவங்களும் பயன்களும் நன்மைகளும் வாழ்வியல் உண்மைகளும் - உங்கள் குரு யார் ? என்று தெரியுமா உங்களுக்கு...! அறிந்து கொள்ளுங்கள்...!! வாழ்வில் மேன்மை பெறுங்கள்...!!! 🙏 Necessities, Needs, Importance, Benefits, Advantages and Life Facts of "Guru" Worship - Who is your Guru? Did you know that...! Come to Know it...!! Get Eminence in Life...!!! 🙏

 உ

ஓம் நமசிவாய                           சிவாயநம ஓம்




"சிவமயம்"

"திருச்சிற்றம்பலம்"

"அன்பே சிவம்"

"காக்கும் நாயகி 'ஸ்ரீ கடந்தை நாயகி' என்கிற 'ஸ்ரீ அழகிய காதலி அம்மன்' என்கிற 'ஶ்ரீ ஆமோதனாம்பாள்' உடனுறை எம்பெருமான் 'ஶ்ரீ கை வழங்கீசனார்' என்கிற 'ஶ்ரீ பிரளயகாலேசுவரர்' என்கிற 'ஸ்ரீ சுடர்கொழுந்தீசர்' என்கிற 'ஸ்ரீ தூங்கானைமாடத்து நாதர்' துணை"  

"ஸ்ரீ அன்பிற்பிரியாள் அம்மன் துணை"

"மங்கள தேவி ஸ்ரீ கண்ணகி அம்மன் துணை"

"வணிகர் குல நாயன்மார்கள் அறுவர் துணை"

"எம்பிரான் ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் துணை"

"எம்பிரான் ஶ்ரீ மெய்கண்டார் துணை"

"எம்பிரான் ஶ்ரீ  சிவ மறைஞான சம்பந்தர் துணை"


"கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் அடியார்க்கும் அடியேன்!" 🙏




தங்களுக்கு குருவருள் திருவருளாய் நிலைத்து நிற்கட்டும்...!    


ஸ்ரீ சிவ சிவ...! ஸ்ரீ சிவ சிவ...!! ஸ்ரீ சிவ சிவ...!!!


மெய்யன்பர்களே, இதுவரை உங்கள் குரு யார் ? என்று தெரிந்திருக்காது. இப்போது உங்களுக்கு பொற்காலம் ஆரம்பம். கீழே உள்ளதை படித்து அதன்படி குருவை தேர்ந்தெடுத்து வாழ்க்கையை நடத்துங்கள்.

எந்த நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தீர்களோ? அந்த நட்சத்திரத்தில் அவதரித்த அல்லது சித்தி ஆன அல்லது முக்தி ஆன நட்சத்திர குருமார்களை நாயன்மார்களை உங்கள் குருவாக தேர்ந்தெடுங்கள். 

உதாரணமாக தங்கள் நட்சத்திரம் 'சுவாதி' என்றால், உங்கள் குரு ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள் ஆவார். இவர் முக்தியடைந்த ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தில், (அதாவது சுந்தரரின் குருபூஜை நாளில்) இவர் முக்தியடைந்த தலமான 'திருவஞ்சைக்களம்' நேரில் சென்று  சுவாமியை வழிபடுங்கள். ஒவ்வொரு மாத சுவாதி அன்றும் சுவாமியை வழிபடுங்கள். 

தங்களது நட்சத்திரம் 'உத்திரம்'  என்றால், உங்கள் குரு ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள் ஆவார். அவரது ஆவணி மாத உத்திரம் அவதார நட்சத்திரத்தின் படி, அவர் உங்களுக்கான குரு ஆவார்.  இவர் அவதரித்த ஆவணி  மாத உத்திரம் நட்சத்திரத்தில், இவர் அவதரித்த தலமான 'திருநாவலூர்' நேரில் சென்று  சுவாமியை வழிபடுங்கள். ஒவ்வொரு மாத உத்திரம் அன்றும் சுவாமியை வழிபடுங்கள்.  

இன்னொரு உதாரணமாக, தங்களது நட்சத்திரம் 'ரேவதி' என்றால், உங்கள் குரு ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் ஆவார். இவர் முக்தியடைந்த தை மாத ரேவதி நட்சத்திரத்தில், (அதாவது கலிக்கம்பரின் குருபூஜை நாளில்) இவர் முக்தியடைந்த தலமான 'பெண்ணாகடம் (பெண்ணாடம்)' நேரில் சென்று  சுவாமியை வழிபடுங்கள். ஒவ்வொரு மாத ரேவதி அன்றும் சுவாமியை வழிபடுங்கள். 

தங்களது நட்சத்திரம் பூரட்டாதி என்றால், உங்கள் குரு ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் ஆவார். அவரது மார்கழி மாத பூரட்டாதி அவதார நட்சத்திரத்தின் படி, அவர் உங்களுக்கான குரு ஆவார்.  இவர் அவதரித்த மார்கழி மாத பூரட்டாதி நட்சத்திரத்தில், இவர் அவதரித்த தலமான 'பெண்ணாகடம் (பெண்ணாடம்)' நேரில் சென்று  சுவாமியை வழிபடுங்கள். ஒவ்வொரு மாத பூரட்டாதி அன்றும் சுவாமியை வழிபடுங்கள். 

இதே மாதிரி, ஒவ்வொரு நாயன்மார்களின் அவதாரம் மற்றும் முக்தி அடைந்த மாதம், நட்சத்திரம், தலம் விவரங்கள் மற்றும் நாயன்மார்களது குலம், காலம், வழிபாடு, நாடு, தொண்டு என அவர்களது விவரங்களை  அவர்களுடைய தகவல்களை மிக பொறுப்புடனும் சிரத்தையுடனும் கவனத்துடன் பின் வரும் அட்டவணைகளில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். இதன் மூலம் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், தங்களது குரு யார் என்பதை  தங்களது நட்சத்திரத்தின் படி, அவதார நட்சத்திரமாக அல்லது முக்தியடைந்த நட்சத்திரமாக உடைய நாயன்மாரை, தங்களின் குருவாக தேர்ந்தெடுத்து, அந்த சுவாமியை வழிபட்டு வாழ்வில் மேன்மை அடைய வேண்டுகிறோம். 🙏 நாயன்மார் முக்தியடைந்த மாதம் நட்சத்திரம் அன்று தான் அவரின் குருபூஜை கடைப்பிடிக்கப்படுகிறது.

குரு வழிபாட்டின் அவசியத்தையும், முக்கியதுவத்தையும், தேவையையும், பயனையும், நன்மைையையும் மனதார நம்பிட, அதற்கான உண்மைகளை விளக்கங்களை வரலாற்று பூர்வமாக, ஆன்மீக பூர்வமாக தகுந்த ஆதாரங்களோடு, விளக்கங்களோடு பின்வரும் பக்கங்களில் சொல்லப்பட்டு உள்ளவைகளையும் கவனமாக பார்த்தும் படித்தும் அறிந்து கொள்ள வேண்டுகிறோம். பயனடைய வேண்டுகிறோம்🙏

தினந்தோரும் கோயிலில் அல்லது வீட்டில் வழிபடுங்கள். சுத்தமான நல்லெண்ணெய் 50 மில்லி வாங்கி ஒரு புது அகலில் விளக்கு போடுங்கள். முதலில் எண்ணெய் ஊற்றி பிறகு திரி போடுங்கள். 


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

    
    
    
    
    
    
    


             

தருமபுரம் ஆதீனம் சொந்தமான திருவையாறு தேவஸ்தானம், அருள்மிகு அறம் வளர்த்த நாயகி என்கிற ஸ்ரீ தர்ம சம் வர்த்தினி உடனாய அருள்மிகு  ஐயாறப்பபர் என்கிற ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் ஆலயத்தில், ஆடி அமாவாசை அப்பர் கயிலைக்காட்சி விழாவின் போது, வீதி உலா வரும்

63 நாயன்மார்கள் உற்சவர்கள் காட்சி.
👆






👆பல்வேறு சிவாலயங்களில் உள்ள 63 நாயன்மார்கள் சன்னதி👆



👆பல்வேறு சிவாலயங்களில் உள்ள 63 நாயன்மார்களின் உற்சவர்கள்👆



திருத்தொண்டத்தொகை | சுந்தரர் தேவாரம்
திருமுறை - 7
பதிகம் - 39

👆திருத்தொண்டத்தொகை என்பது சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப்பட்ட நூலாகும். இந்நூல் சிவபெருமானுடைய அடியார்களைப் பற்றி குறிப்பிடுகிறது. இந்நூலில் 60 தனியடியார்களும் மற்றும் 9 தொகையடியார்களும் குறிப்பிடப் படுகிறார்கள். இந்நூலை மூலமாகக் கொண்டும், எண்ணற்ற இடங்களில் உள்ள கல்வெட்டுகள், செவி வழி செய்திகள், கர்ண பரம்பரை கதைகள் கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தினை இயற்றினார். அதனால் திருத்தொண்டத் தொகையின் ஆசிரியரான சுந்தரமூர்த்தியாரையும், அவருக்கு உறுதுணையாக இருந்த தந்தை சடையனார், தாயார் இசை ஞானியார் ஆகியோரையும் இணைத்து 63 நாயன்மார்களாக கொண்டார். 👆



63 நாயன்மார்கள் பெயரை மிக நேர்த்தியாக இசை வடிவில் கூறும் இளஞ் சிறுமி 👆(குறிப்பு:- காணொளி காட்சி தரம் குறைவாக இருக்கும். மன்னிக்கவும்.🙏)


63 நாயன்மார்கள் பெயர்கள் குழந்தையின் மழலை மொழியில்...!👆
ஈசனே உன் விளையாட்டு,
உலகம் வியக்கும் இந்த வயதில்...
இவ்வளவு ஞானம் கொடுத்து இருக்கிறாய் இந்த குழந்தைக்கு...!

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


ஒவ்வொரு ஊரிலும் உங்களது நட்சத்திரத்திற்கு உரிய நாயன்மார்கள் இருக்கிறார்கள். உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய நாயன்மாரை குருமாரை  ஆத்மார்த்தமாக தேர்ந்தெடுத்து முடிவெடுத்து, அந்த ஸ்ரீ சுவாமியை தினசரி வணங்கி பயன் அடையுங்கள். தினசரி காலை எழுந்தவுடன்,  உடல் தூய்மை செய்து, ஆடை மாற்றி, அம்மா, அப்பா, உங்கள் நட்சத்திர குரு, ஸ்ரீ கணபதி, ஸ்ரீ குலதெய்வம், ஸ்ரீ இஷ்ட தெய்வம், ஸ்ரீ ராம ஜெயம், ஸ்ரீ சிவாய நம, என்று வணங்கி அன்றைய பொழுது தொடங்குக.

இஷ்ட தெய்வம் என்றால், நீங்கள் உங்கள் எண்ணத்தில் பதிந்துள்ள  சுவாமி ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ மகமாயி, ஸ்ரீ அம்பாள், ஸ்ரீ கணபதி, ஸ்ரீ முருகன், ஸ்ரீ ஐயப்பன், இவ்விதமான தெய்வங்களில் ஏதேனும் ஒரு தெய்வம். 

உங்கள் நட்சத்திர குரு அவதாரம் ஆன அல்லது முக்தி/ சித்தி ஆன ஊர்களுக்கு, அவர்கள் அவதாரம் அல்லது முக்தி/சித்தி ஆன நட்சத்திர மாதம் அன்று, வருடம் ஒருமுறை சென்று வாருங்கள். 

இதே மாதிரி, அவதாரம் அல்லது முக்தி/சித்தி ஆன நட்சத்திர மாதம் அன்று வருடம் ஒருமுறை நேரடியாக சென்று வழிபட்டு வருவதோடு மட்டுமல்லாமல், மாதம் மாதம் வரும் அதே அவதாரம் அல்லது முக்தி/சித்தி ஆன நட்சத்திர அன்றும் உங்கள் ஊரிலோ அல்லது அருகாமை ஊரிலோ உள்ள நட்சத்திரத்திற்கு உரிய குருவான நாயன்மார்களை / குருமார்களை வழிபட்டு வாருங்கள். எந்த கிரகமும் உங்களை ஒன்றும் செய்யாது. அடிக்கடி ஜாதகம் பார்க்காதீர்கள். 

ஸ்ரீ குருமார்களை வழிபட்டால் கிரகங்கள் ஒன்றும் செய்யாது. ஒரு ஆலயத்தை உறுதியாக பிடித்துக் கொள்ளுங்கள்.  அந்த ஆலயத்திற்கு தினசரி போய்  வாருங்கள்.  அந்த ஸ்ரீ சாமியை முறையோடு வணங்குங்கள். பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் ஓவராயில் பண்ணிய கடிகாரம் போல நல்லபடியாக நடக்கும்.  தினசரி தொண்டு செய்யுங்கள். 

குரு தான் நம்மைய சுவாமியிடம் அழைத்துச் செல்வார். நம்முடைய கோரிக்கைகள் / வேண்டுதல்கள்/பிரார்த்தனைகள் சுவாமியை போய் சேரும். உங்கள் குருமார்களை வழிபாட்டால் அவர்கள் உங்களுக்கு தேவையானதை சுவாமியிடம் இருந்து உடனே பெற்றுத் தருவார்கள். குருமார்கள் கோரிக்கை உடனே சுவாமியைப் போய்ச் சேரும்.  மேலும் தாய் தந்தையை வழிபடாமல், குருவை வணங்கி பயன் இல்லை. 

எண்ணிலா கோடி உலகில், எண்ணிலா கோடி ஆலயங்கள் உள்ளன. சில  ஆலயங்களில் விண்ணப்பம்/வேண்டுகோள்/வேண்டுதல் வைத்தால் பலன் கிடைக்கும். சில ஆலயங்களில் தொண்டு செய்தால், பதிகம் பாடினால், பலன் கிடைக்கும். சில ஆலயங்களை  கட்டி கும்பாபிஷேகம் செய்தால், பலன் கிடைக்கும். சில ஆலயங்களில் தீபம் இட்டால், பலன் கிடைக்கும்.

நீங்கள் எந்த ஸ்ரீ சுவாமி / தெய்வம் இருக்கும் கோயிலுக்கு தினசரி  வந்து தொண்டு செய்து அன்பு காட்டி, 

{அன்பு என்றால் என்ன? சுவாமி சன்னதி அழுக்காக இருந்தால் கண்கலங்குதல்,   சுவாமிக்கு வஸ்திரம்  ஆடைகள் அழுக்காக இருந்தால் கண்கலங்குதல்,  சுவாமிக்கு  அலங்காரம் செய்யாமல் இருந்தால் கண்கலங்குதல்,  சாமிக்கு ஆறுகால பூஜை நடைபெறாமல் இருந்தால் கண்கலங்குதல்,  சுவாமிக்கு புஷ்பம் வில்வம்  சாத்தாமல் இருந்தால் கண்கலங்குதல், சுவாமி மீது கரப்பான்பூச்சி ஏறுவதைக் கண்டால் கண்கலங்குதல், ஸ்ரீ சுவாமிக்கு வருடாவருடம்  பிரம்மோற்சவம் அதாவது தேரோட்டம், திருவிழாக்கள் நடக்காமல் இருந்தால் கண்கலங்குதல். சுவாமி சந்நிதி இருட்டாக இருந்தால் கண்கலங்குதல்,   சுவாமிக்கு  12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடக்காமல் இருந்தால்  கண்கலங்குதல்,  பூஜா காலங்களில் மேளம், நாதஸ்வரம், மணி ஒலிக்காமல் இருந்தால் கண்கலங்குதல், இவை அத்தனையும் பார்த்து கண்கலங்கி சாமிக்கு தொண்டு செய்தல், மேற்கண்ட காரியங்கள் நடைபெற பொருள் உதவி செய்தல், இதுதான் உண்மையான அன்பு}

நமக்கு உடல், உயிர் தந்தது ஆண்டவன் தான். அந்த ஆண்டவனுக்கு  உடல் நோக தொண்டு செய்தால் தான் அன்பு. அன்பு காட்டி வழிபட்டால் இவ்வுலக வாழ்வுக்கு தேவையான அனைத்து செளபாக்கியங்களையும் தந்து வீடுபேற்றைத் தருபவர்கள் குருமார்கள்.  இது சத்தியம். உண்மையும் கூட.🙏

உங்களுக்கு உரிய, நட்சத்திர குருமார்களை தங்களது செல்போனில் படம் பிடித்து தினசரி வழிபடுங்கள். முடியும் என்றால், சைவமாக மாறவும், திருநீறு, ருத்திராட்சம் அணியுங்கள். நீங்கள் பிறர் மனம் புண்படும்படி பேசாதீர்கள். தினசரி ஆலய தொண்டு செய்யுங்கள்.

"குரு" எனும் சொல் தமிழில் இருந்து வழங்கிய சொல் அல்ல. "குரு" எனும் சொல் அடிப்படையில் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. பெரும்பாலான சமஸ்கிருத மந்திரங்களில் "குரு" என்னும் சொல்லை காணலாம். "கு" என்றால் விளக்குபவர், "ரு" என்றால் இருள் என பொருள்படும். ஆக குருவானவர், மனிதர்களிடம் சூழ்ந்துள்ள அறியாமை இருளை நீக்குபவர் ஆவர்.  நம் அறியாமையை போக்கி, அறிவிக்கும் தகுதியை உடைய குரு இந்நிலையில் இறைவன் ஆகிறான். ஏன் குரு நிலைக்கு அப்படி ஒரு சிறப்பு வழங்கப்பட்டுள்ளது என ஆராய்ந்து பார்த்தோமானால், குருவானவர்கள் அடியார் பெருமக்கள் போன்றவர்கள் எந்நேரமும் தங்களை இறைசிந்தையிலே ஈடுபடுத்திக் கொள்வதால் நினைத்த மாத்திரத்தில் இறைவன் ஒன்றிக்க கடவர். திருமந்திர முதல் தந்திரத்தில் உபதேச பகுதியில் திருமூலர், இப்பூவுலகில் வாழும் மனிதர்களை,  இறைவனானவன்  தன் கருணைமிகுதியால் தடுத்தாட்கொள்ள, குருவடிவில் மனித உடம்பெடுத்துப் பிறவிப்பிணி நீக்க உபாயமளிக்கிறார் என பின்வரும் திருமந்திர உபதேசம் மூலம் மொழிகிறார்.

விண்ணின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்கொண்டு
தண் நின்ற தாளைத் தலைக் காவல் முன் வைத்து
உள் நின்று உருக்கி ஓர் ஒப்பு இலா ஆனந்தக்
கண் நின்று காட்டிக் களிம்பு அறுத்தானே.
                      - (திருமந்திரம் : 113)

தாம் செய்த நல்வினை,  தீவினை அடிப்படையில் பிறவித் துன்பம் எனும் மாயையில் சுழன்று துன்புறும் உயிர்களுக்கு மேன்மையின் சிகரமான பரம்பொருளானவர், தன் நிலையிலிருந்து இறங்கி வந்து, பிணி தீர்க்கும் திறவுகோலான தன் அருளை தலையாய காவலாக முன் நிறுத்தி; அவரே ஒவ்வொரு உயிருக்குள்ளும் நின்று, அங்கு திடப்பொருளாய் தேங்கி கிடக்கும் தீங்கனைத்தையும் திரவியமாய் உருக்கி; ஒப்பிடவே இயலாத பெருமகிழ்வின் நுணுக்கத்தை, தன் விழியென்னும் வழியின் ஊடே காண்பித்து உணர்த்தி, அதன்வழி அகத்தின் உள்ளே நிறம்பியிருந்த நஞ்சுகளை அறவே அகற்றுகிறார். அதாவது,

பரம்பொருள் விண்ணுலகை விட்டிறங்கி, மண்ணுலகை வந்தடைந்து,  வினைக்கு இடமான மனித உடம்பெடுத்து, தண்மை (குளிர்ச்சி ) பொருந்திய திருவடிகளை ஆன்மாக்களுக்குப் பாதுகாவலாக வைத்து உள்ளத்துள்ளே தன் திருவருள் புகச் செய்து கல்மனதைக் கரைத்து, அருள் ஒளியால் நெகிழச் செய்து, ஒப்புவமை கூற இயலாத பேரானந்தப் பெருவெள்ளம் பெருக்கெடுத்தோட, கண்கள் அருள் ஒளி கண்டு களிக்கச் செய்து மன மயக்கங்கள் என்னும் பாசத் தளைகளை (பாவ வினைகளை) எல்லாம் அறுத்தெரிந்தான். ஆதியோடு கலந்த இவர்கள் பூசிக்கத்தக்கவர்கள் என்று திருமூலரே திருமந்திரத்தில் அருளிச் செய்துள்ளார். நம்மை போன்ற மானிடர்கள் தானே என எண்ணி பூசிக்காதவர்களைப் புல்லரிவாளர் என திருமூலர் நகைக்கின்றார்.

திருமந்திரம் – குருவாய் அருள்பவன் சிவன்

சுத்த சிவன் குருவாய் வந்து தூய்மை செய்து
அத்தனை நல்கு அருள் காணா அதி மூடர்
பொய்த் தகு கண்ணான் நமர் என்பர் புண்ணியர்
அத்தன் இவன் என்று அடி பணிவாரே.
                - (திருமந்திரம் : 1578)

என குரு வடிவத்தைப் போற்றி இறைவனுக்குச் சமமாக காட்டப்பட்டுள்ளது. அதாவது, சிவனே சீவனிடத்தில் அருள் கொண்டு குருவாக உருவெடுத்து வருவான். சீவனின் மலங்களை அகற்றுவான். அவன் அருளை அறியாத அறிவற்றவர்களும், உலக இன்பத்தில் ஈடுபாடு உடையவர்களும், பாசம் என்னும் தளைப் பட்டவர்களும் குருவைத் தமக்குச் சமமாகவே எண்ணுவர். ஞானியரோவெனில் குருவைச் சிவனாகவே கருதுவர்.

இக்கருத்தையே மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் தெளிவாக விளக்குகிறார்.

“கோகழியாண்ட குருமனிதன் தாள் வாழ்க"  
                     - (திருவாசகம் - சிவபுராணம்)

அருபரத் தொருவன் அவனியில் வந்து
குருபரனாகி அருளிய பெருமையைச்
சிறுமை என்று இகழாதே.
          - திருவாசகம், போற்றித் திருஅகவல் (75-77).

பிரபஞ்சத்துக்கு அப்பால் உயர்ந்த இடத்தில் இருக்கின்ற பரமன், பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாகிய இந்த நில உலகில் பரமகுருவாய் வந்து என்னை ஆட்கொண்டது அவனுடைய பெருமைக்கோர் எடுத்துக் காட்டன்றோ! அருபமாகிய ஆன்மா / ஆன்ம ஒளி  உருவம் தாங்கி குருவாக  வந்து அருளிய நூல் தான் திருவாசகம்.

இறைவனின் இச்செய்கையை வெகு சாதரணமாக எண்ணிவிடக் கூடாது.

அந்தண னாகி யாண்டுகொண் டருளி
இந்திர ஞாலங் காட்டிய இயல்பும்
          - திருவாசகம், கீர்த்தித் திருஅகவல் (42-43).

தாயேயாகி வளர்த்தனை போற்றி
மெய்தரு வேதியனாகி வினைகெடக்
கைதரவல்ல கடவுள் போற்றி.
            - திருவாசகம், போற்றித் திருஅகவல் (87-89).  

மெய்யறிவைத் தரும், மனித உருவில் குருவாக மறையோனாக ௮ந்தணனாக வந்து வினைகள் நீங்க, கைகொடுத்துக் காப்பாற்ற வல்ல கடவுளே! வணக்கம். 

புண்ணியன் மண்ணிடை வந்துதோன்றிப்
பேதம் கெடுத்தருள் செய்பெருமை
அறியவல்லார் எம்பிரான் ஆவாரே
                - திருவாசகம் - திருவார்த்தை பண் : பாடல் எண் 7

புண்ணியனாகிய இறைவன் இம்மண்ணில் வந்து தோன்றி, பேதம் கெடுத்தான். (இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இருந்த பிரிவினையை அகற்றினார்.)

சிவபெருமானே, சற்குரு வேதியவடிவமாக ௮ந்தணனாக மனித உருவில் குருவாக வந்து மாணிக்கவாசகருக்கு திருவடி தீக்ஷைசெய்து ஆட்கொண்டருளினார்‌.

இக்கருத்தையே,

இறவா இன்பத்து எமை இருத்த வேண்டிப்
பிறவா முதல்வன் பிறந்தான்.
             - போற்றிப்பஃற்றொடை - 69

என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது.

'அவதார்' என்று சமஸ்கிருதச் சொல்லிற்கு 'இறங்கி வருதல்' என்பது பொருள். இதன் தமிழ் வடிவமே 'அவதாரம்' என்பது ஆகும்.

'இறங்கி வருதல்' என்று கூறினால்,

-யார் இறங்கி வந்தார்?

-எங்கிருந்து இறங்கி வந்தார்?

-எங்கு வந்தார்?

-எவ்வடிவத்தில் இறங்கி வந்தார்?

-ஏன் இறங்கி வந்தார்?

என்ற கேள்விகள் எழுவது இயல்பு.

1) யார் இறங்கி வந்தார்?
பரம்பொருள்-அருபரத்தொருவன்-புண்ணியன்-கடவுள்-பிறவா முதல்வன்.

2) எங்கிருந்து இறங்கி வந்தார்?
விண்ணின்று இழிந்து - அருபரத்திலிருந்து.

3) எங்கு வந்தார்?
அவனியில் வந்தார் - மண்ணிடை வந்தார்.

4) எவ்வடிவத்தில் இறங்கி வந்தார்?
வினைக்கு ஈடாய் மெய்கொண்டு வந்தார். குருவாக வந்தார், பிறந்து வந்தார்.

5) ஏன் இறங்கி வந்தார்?
களிம்பு (பாவம்) அறுக்க வந்தார். வினை கெட வந்தார். பேதம் கெடுத்து அருள் செய்ய வந்தார். இறவா இன்பத்து எமை இருத்த வந்தார்.

குரு வழிபாடு செய்த நாயன்மார்கள். அடியார்கள் வாழ்க்கையில் கடைபிடித்த பக்தி மார்க்கத்தில் குரு வழிபாடும் ஒன்று. குருவைச் சரணடைந்து இறைகதியை அடைந்தவர்கள் மொத்தம் 12 பேர் ஆவர்.

திருமந்திரம் – சன்மார்க்க நெறிப் பெருமை

தெரிசிக்கப் பூசிக்க சிந்தனை செய்யப்
பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்
குருபக்தி செய்யும் குவலயந் தோர்க்குத்
தருமுத்திச் சார்பூட்டுஞ் சன்மார்க்கந் தானே
               - (திருமந்திரம் : 1479)

திருவடி ஞானம் உள்ளவன் – திருவடியை

1) தரிசிப்பான்
2) பூசிப்பான்
3) நினைப்பான்
4) தொடுவான்
5) அதன் பெருமை பேசுவான்
6) அதை தன் சிரசில் சூடுவான்

இவ்வாறு குருவாகிய திருவடிக்கு பக்தி பூண்டு, முத்தி அடைபவன் சன்மார்க்கத்தவன் ஆவான். இது சன்மார்க்கப் பெரு நெறி ஆகும்  – இதன் பெருமையாகும். அதாவது,

எல்லாம் வல்ல பரம்பொருளை குருவை முன்னிட்டுக் கொண்டே  வழிபடுதல் முக்திக்கு வழி என திருமூலர் பகிர்கின்றார். குருவைப் பார்த்து ஆசி பெறுவதும், அவரை பூஜிக்கவும், அவரின் அருள் வார்த்தைகளைச் சிந்தித்து திளைத்திருக்கவும், திருவடிகளை வணங்கி பக்தி செலுத்தவும் சன்மார்க்கம் சரியான வழி. இதனை குருநெறி, குரு பக்தி என திருமூலரின் பல பாடல்களில் பார்க்க முடிகிறது.

பெரிய புராணத்திலும் தவப்புதலவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் போன்றோர்களை குரு நிலையில் நிறுத்தி பல நாயன்மார்கள் பூசை செய்திருப்பதைக் காணலாம்.  குரு வழிபாடு ஞானம் அடைய சிறந்த வழி என கருதப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. அறிவித்தாலொழிய அறியா பசுவிற்குப் பதியாகி அறிவிக்கும் கர்மத்தைப் புரிபவன் இறைவன். (வேதம், ஆகமம் என்ற இரு நூல்களில், ஆகமம் என்ற சொல்லுக்கு ‘வந்தது’ என்பது பொருள். இச்சொல், சிவபெருமானிடமிருந்து இந்நூல் வந்தது என்பதைக் குறிக்கிறது. ஆகமம் என்ற சொல்லை மற்றொரு விதமாகவும் பிரித்துப் பொருள் காண்கிறார்கள். ஆ என்பது பாசம்; க என்பது பசு; ம என்பது பதி. எனவே இம்மூன்றையும் ஆகமம் கூறுகிறது.) ஞானியரோ அஞ்ஞானத்தை போக்குபவர்.  மனதில் உள்ள மாசுக்களை அகற்றுபவர். அவ்வாறு இறைவனுடைய அருளள் தொழிலைப் புரியும் குரு, மெய்ஞானத்தைப் போதித்து  இவ்விடத்தில் இறைவனாக கருதப்படுகிறார்.

மனிதநேயப் பரிவு

சைவம் மனித நேயத்தை வற்புறுத்தும் ஓர் அன்பு நெறி. சிற்றுயிர்கள் இடத்தும் கருணை காட்டவேண்டும் என்று அது வற்புறுத்துகின்றது. இறைவன் உலகத்தையும், நுகர் பொருள்களையும் உயிர்கள் பெற்று இன்புறுவதற்கே படைத்தளித்தான். உயிர்களிடமிருந்து இறைவன் அன்பு ஒன்றைத் தவிர வேறு யாது ஒன்றும் பெற விரும்புவதில்லை. ஆனால் சமயவாதிகள், சடங்கு நெறியில் பற்றுக் கொண்டு நின்று, மனிதனின் பசிக்கு உணவிட விரும்பாது இறைவனுக்குப் படையலிட்டு மகிழ்கின்றனர். இறைவன் மனிதன் அளிக்கும் உணவையும், படையலையும் உண்டு மகிழ்கின்றானா என்றால் இல்லை. இறைவன் கவனத்திலும் கணக்கிலும் அவனுக்குப் படைக்கப்படும் படையல் இடம் பெறுவதில்லை. அவன் கணக்கில் இடம்பெற விரும்பினால் பசித்திருப்போருக்கு உணவு அளியுங்கள். அதுவே அவனைச் சென்றடையும் அரிய பெருநெறி என்று காட்டுகிறார் திருமூலர். மேலும் ஞானிகளுக்குச் செய்கின்ற தர்மங்கள் இறைவனைச் சென்றடையும் என திருமூலர் பின்வருமாறு குறிப்பிடுகிறார், 

படமாடக் கோயில் பகவற்கு ஒன்றுஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றுஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே.
           - (திருமந்திரம் : 1857)

கோயில சாமிக்குக் கொடுத்தால் மனிதனுக்கு உதவாது. மனிதனுக்குக் கொடுத்தால் கோயில் சாமிக்குப் போய்ச் சேரும். அதாவது,

அது என்ன ‘நம்பர்க்கு’ என்று நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது; ‘நம்பர்’ என்ற சொல் ‘நம்மவர், எம்மைப்போன்ற மனிதர்கள்’ என்ற பொருள் தரும். மனிதரின் உள்ளத்தில் இறைவன் குடி கொண்டுள்ளான். எனவே மனிதர்கள் இறைவனின் நடமாடும் கோயில்கள், நடமாடும் கோயில்களாகிய நம் போன்ற மனிதர்க்கு ஒன்று கொடுப்பது இறைவனுக்குக் கொடுப்பதற்கு ஒப்பாகும். அதாவது,

ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனுக்குச் செய்யும் தொண்டுகளைவிட, நடமாடும் கோயில்களாக விளங்கும் அருளாளர்களுக்குத் தந்து உதவுவது இறைவனையே சென்று சேரும் என பாடல் விளக்குகிறது. அருளாளர்களுக்குச் செய்யும் தொண்டு எப்படி கடவுளிடம் சென்றடைகிறது. அதற்கும் பதில் வைத்திருக்கிறார் திருமூலர்.

தவசீலர்களான அருளாளர் பெருமக்கள் தன் நலம் கருதாமல் சதா எந்நேரமும் இறைவனை எண்ணி ஒன்றித்து இருக்கையில், அவர்களுக்குச் செய்யும்  சேவைகள் இறைவனை சென்றடைகிறது. நினைத்த மாத்திரத்தில், தவசிகள் நொடி பொழுதில்  இறைவன் இவர்களுடைய மனதில் பொருந்தும் வரமுடையவர்களாக இருப்பதனால் நாம் அருளாளர்களை  இறைவனாக வழிபடுகிறோம். இதனையே திருமூலர்,

மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை
ஆத்தனுக்கு ஈந்த அரும்பொருள் ஆனது
மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்
தீர்த்தமதாம் அது தேர்ந்து கொள்வீரே.
                         - (திருமந்திரம் : 1859)
சிவனுக்கு ஈந்தது 3 மூர்த்தி, 21 குரவர் ஆகியோருக்குத் தீர்த்தம் ஆகும். அதாவது,

குருவையே இறை மூர்த்தமாக வழிபட்டு இறைகதியை அடைந்த நாயன்மார்கள்  நம் பக்தி மார்க்கத்தில் நிறையவே உள்ளனர். "குரு சேவையின் மகிமை" இதன் மூலம் நமக்கு நன்கு அறியப்படுகிறது "குருவருள் இன்றி திருவருள் இல்லை" என உரைக்கும் ஆன்றோர்களின் வாக்கு பொய்மை ஆகுமா.

சரியை கிரியை யோகம் ஞானம் தவிர பக்தி மார்க்கம் வழியாகவும் இறை பேரருளைப் பெற முடியும் என்பதை பெரியபுராண திருத்தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றின் மூலம் நாம் அறியலாம். திருமூலர் நாயனார் உணர்ந்து எழுதிய திருமந்திர சான்றுகளுடன் அவற்றை தொடர்புடுத்துகையில் திருமுறைகள் வெறும் தோத்திர நூல் மட்டுமல்லாமல் நம்மை வழிநடத்தும் சாஸ்திரங்களாக அமைகின்றன. குரு, லிங்க, சங்கம வழிபாடுகளின் மகத்துவத்தை திருமந்திர பாடல்களுடன் நுண்நோக்கி பார்க்கையில் அடியார்களின் வழிபாடுகள் வெவ்வேறாக அமைந்தாலும் அடிப்படை நோக்கமானது சிவத்தை அடைவதாகவே உள்ளது. அந்த சிவத்தை அடைய மூலமாக இருக்க வேண்டியது கருணையும் அன்பும். 

63 நாயன்மார்களும் இறைவன் மீது தீவிர அன்பு கொண்டவர்களாக இருந்தனர். அந்த அன்புதான் சிவத்தை உணர வழிவகுத்தது எனலாம்.  'அன்பே சிவம் என ஆரும் அறிந்தப்பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே' எனும் திருமூலரின் பாடலுக்கேற்ற மையக் கருத்தைப் பெரியபுராணத்தில் பழமையான வரலாற்றுச் செய்யுள் வடிவில் தொகுத்து வழங்கிய சேக்கிழாரி் திருவடி போற்றுதலுக்குரியது. அதாவது,

திருமந்திரம் ஆகமத்தின் சாரமாக அமைந்திருந்தாலும் அனைவரும் உணரும் எளிமையும், இனிமையும் உடைய பாடல்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ‘அன்பே சிவம்’ என்ற தொடரைப் பலரும் அறிவர். மனிதர்கள் ஏனைய மனிதர்கள்பால் செலுத்தும் அன்பில்தான் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலகத்தில் தோன்றிய கடவுள் சார்புடைய மதங்களும், கடவுள் மறுப்புச் சமயங்களும் கூட, அன்பினைப் பெரிதும் போற்றியே உரைக்கின்றன. திருவள்ளுவர் முதலிய அறநூலாசிரியர்களும் அன்பின் சிறப்பையும், இன்றியமையாமையையும் எடுத்துரைத்துள்ளனர். சைவர்களின் இறைவன் சிவன். அவன் யார்? அவன் இயல்பு எத்தகையது என்ற வினாக்களுக்குத் திருமூலர் தரும் விடை ஆழ்ந்த பொருட்சிறப்புடையது. அன்புதான் எங்கள் சிவன். 'சிவம் வேறு அன்பு வேறு' என்பார் அறியாமை மிக்கவர்கள். 'இரண்டும் ஒன்றே' என்று உணரும் உணர்வில், இறைமைப் பேறு வாய்க்கும்.

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே
                           - (திருமந்திரம் : - 270)

என்பது அன்பின் சிறப்புரைக்கும் அரிய பாடல்.

மந்திர தந்திர மா யோக ஞானமும்
பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்
சிந்தனை செய்யாத் தெளிவுயாது ஊண்பொருட்டு
அந்தகர் ஆவோர் அசற்குரு வாமே.
                          - (திருமந்திரம் : 2045)

குருவானவர் சீடர்களுக்கு வழிகாட்டலாக நின்று ஆன்மீகப் பாதையில் மேலும் சித்தி பெற மந்திரங்கள்,  தீக்ஷைகள் வழங்குவார்கள். குருவானவர் தவ வாழ்க்கை மேற்கொண்டு, உலக இன்பங்களை விடுத்து, இறைவனை அடையும் மார்க்கத்தைப் போதிப்பவராவர். நிலையில்லா உலக சொத்துகளில், பந்த பாசங்களில் நாட்டம் இல்லாதவராகவும்  இருந்து, நிலையான யோக ஞானத்தை அடைந்தவர்களாக இருப்பர். இதுபோன்ற குருவிடம் சென்று பாடம் கற்காமல், வயிற்றுப் பிழைப்பிற்காக மதம் நடத்துபவர்கள் 'அசற்குரு' என திருமூலர் பகிற்கிறார்.

செல்லும் பாதையை வழிகாட்ட குருடர்களின் உதவியை நாடினால் வழிதவறி தவறான பாதைக்கு இட்டுச்சென்று குழியில் விழ  காரணமாவதுபோல்,  நல்ல ஞானமும் தெளிவும் அற்ற அசற்குருவின் பாதையில் சென்றால், அறியாமை எனும் குழியில் விழவோம் என திருமூலரின் கீழ்காணும் பாடலில் காணலாம்.

குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர்
முரணும் பழங்குழி வீழ்வார்கள் முன்பின்
குருடனும் வீழ்வார்கள் முன்பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே.
               - (திருமந்திரம் : 2048)

குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே.
               - (திருமந்திரம் : அத்தியாயம் 13. அபக்குவன்; 1680)

'அபக்குவன்' என்றால் 'இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்' என விளக்குகிறார்.  குருட்டினை (மாயையாகிய இருள்) நீங்கும் (விலகுகின்ற உயர்ந்த தன்மை கொண்ட) குருவினை (உண்மை குருவினை) கொள்ளார் (தேடி அடையாதவர்கள்) குருட்டினை (மாயையாகிய இருள்) நீங்கா (தம்மை விட்டு இன்னுமும் நீங்காத) குருவினை (பொய்யான குருவிடமே) கொள்வர் (சென்று சிக்கிக் கொள்கிறார்கள்) குருடும் (இது ஒரு குருடனும்) குருடும் (இன்னொரு குருடனும்) குருட்டு (சேர்ந்து பார்வை இல்லாமல் இருளில் இடம் தெரியாமல்) ஆட்டம் (தடுமாறி) ஆடி (ஆடுவது போல இறைவனை அடையும் வழி தெரியாமல் ஆடி) குருடும் (இந்த குருடனும்) குருடும் (அவன் உண்மை என்று நம்பிய பொய்யான குருவாகிய குருடனும்) குழி (சேர்ந்து பிறவிக் குழியில்) விழும் (மீண்டும் மீண்டும் விழுவதற்கே) ஆறே (வழியாகவே இருக்கும்).

குருடும் எனும் முதல் சொல் பக்குவம் அடையாதவர்களையும், இரண்டாம் முறை குருடு, அறியாமையால் அஞ்ஞான ஆசிரியனைத் தேடுபவர்களையும் குறிப்பிடுகிறார்.

எனவே, இறைவனைச் சென்று அடைதற்கு உரிய எளிய வழி, "குருவை வழிபடுதலால் கிட்டும்" என்பது வாழ்வியல் உண்மைகள் ஆகும் என்பதை தெள்ளத்தெளிவாக அறிந்து இருப்பீர்கள்.

ஸ்ரீ சிவ சிவ

எனவே, மெய்யன்பர்களே, ஆன்மீக இறை அன்பர்களே, அன்பு மக்களே, இதுவரை உங்கள் குரு யார் ? என்று தெரியாமல் இருந்துயிருப்பீர்கள். இப்போது உங்களுக்கு பொற்காலம் ஆரம்பம் ஆகி விட்டது. இப்போது தெரிந்து இருக்கும் உங்களது குரு யார் என்று?! மேலே  உள்ளதை மீண்டும் கவனமாக சிரத்தையாக  படித்து அதன்படி குருவை தேர்ந்தெடுத்து அவரை மனதார வழிபட்டு வாழ்க்கையை நடத்துங்கள்.

28வது நட்சத்திரம்: அபிஜித்

உத்திராட நட்சத்திரத்திற்கும் திருவோண நட்சத்திரத்திற்கும் இடையே ஓர் நட்சத்திரம் உண்டு. அதன் பெயர் அபிஜித்

27 நட்சத்திரங்கள் பற்றிய விரிவான ஒரு பார்வை

27 நட்சத்திரங்கள் ஒரு பார்வை

ஜோதிடத்தில் மிக முக்கியமானது நட்சத்திரங்கள் ஆகும். கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம். ஒருவருடைய பிறந்த ஜாதகம், அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அமைகிறது.

ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளாரோ அந்த நட்சத்திரம் எந்த ராசிக்கு உரியதோ அதுவே அவரது ஜென்ம ராசியாகும். ராசிகள் மொத்தம் 12 உள்ளன. நட்சத்திரங்கள் 27 உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களாகப் பிரிக்கப்பட்டு 1,2,3,4 பாதங்கள் என்று குறிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் தனித்தனியேயான குணங்கள் உண்டு. ஒரு நட்சத்திரத்தின் ஒவ்வொரு பாதமும் வெவ்வேறு குணங்களைக் கொண்டவை. இந்த நட்சத்திரமானது, தன் குணங்களுடன் ராசியின் குணத்தையும் சேர்த்து உள்வாங்கிக் கொண்டு, அதற்கேற்ற பலன்களையும், செயல்களையும் ஒருவரிடம் வெளிப்படுத்துகின்றன.

நட்சத்திர பாதம் என்றால் என்ன?
ஒரு நட்சத்திரத்தின் ஒளிக்கற்றைகளை பிரிப்பதே பாதங்கள் ஆகும். ஒளிக்கற்றைகளை நான்கு பாகங்களாக பிரிப்பார்கள். அதனால்தான் ஒவ்வொரு நட்சத்திரதிற்க்கும் 4 பாதங்கள் வருகின்றன. அதை நாழிகை வைத்து பிரிகின்றனர். அதாவது ஒரு நட்சத்திரம் என்றால் 60 நாழிகை. அதை நான்காகப் பிரித்தால் 15 நிமிடங்கள். ஒரு நட்சத்திரத்தின் முதல் 15 நிமிடம் முதல் பாதம், அடுத்த 15 நிமிடம் இரண்டாம் பாதம். அதுபோல பிரித்துக் கொள்வார்கள்.


ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்கள் பின்வருமாறு:

1. அசுவினி

2. பரணி

3. கார்த்திகை

4. ரோகிணி

5. மிருகசீரிடம்

6. திருவாதிரை

7. புனர்பூசம்

8. பூசம்

9. ஆயில்யம்

10. மகம்

11. பூரம்

12. உத்திரம்

13. அஸ்தம்

14. சித்திரை

15. சுவாதி

16. விசாகம்

17. அனுஷம்

18. கேட்டை

19. மூலம்

20. பூராடம்

21. உத்திராடம்

22. திருவோணம்

23. அவிட்டம்

24. சதயம்

25. பூரட்டாதி

26. உத்திரட்டாதி

27. ரேவதி

இவையே 27 நட்சத்திரங்களாகும்.

அசுவனி முதல் ரேவதி வரையான 27 நட்சத்திரங்களின் வடிவங்கள் புரவி, அடுப்பு, ஆரல், சக்கரம், மான்தலை, மூதிரை, கழை, காற்குளம், கட்செவி, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, உடைகுளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி போன்றவை ஆகும்.




நட்சத்திர இராசி மண்டலம்

ஒரு இராசி மண்டலம் என்பது 360 பாகைகளை (டிகிரி) கொண்டது. ராசி மண்டலத்தில் 30 டிகிரியை கொண்டது ஒரு ராசி ஆகும். மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்கள் சமமாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ராசிக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பகிரப்பட்ட நட்சத்திரங்கள் பாதங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாதத்துக்கும் ஒரு குறிப்பிட்ட டிகிரிகள் 12 ராசிகளில் இடம் பெறுமாறு செய்யப்பட்டுள்ளது.

ஒரு ராசியின் பாகைகள் (டிகிரி) = 30 பாகைகள்

ஒரு நட்சத்திரம் = 13 பாகைகள் 20 கலைகள்

60 கலைகள் = 1 பாகை

இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள இராசிகளும் அவற்றின் டிகிரிகள் மற்றும் இராசி ஒவ்வொன்றுக்கும் சரிசமமாக பிரித்து கொடுக்கப்பட்ட நட்சத்திர பாதங்கள் பின்வருமாறு.



1. மேஷ ராசி : 0 to 30 டிகிரி

மேஷ ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்

அஸ்வினி : 1,2,3,4 பாதங்கள்

பரணி : 1,2,3,4 பாதங்கள்

கிருத்திகை : 1 பாதம்

 

2. ரிஷப ராசி : 30 to 60 டிகிரி

ரிஷப ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்

கிருத்திகை : 2,3,4 பாதங்கள்

ரோகிணி : 1,2,3,4 பாதங்கள்

மிருகசீரிடம் : 1,2 பாதங்கள்

 

3. மிதுன ராசி : 60 to 90 டிகிரி

மிதுன ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்

மிருகசீரிடம் : 3,4 பாதங்கள்

திருவாதிரை : 1,2,3,4 பாதங்கள்

புனர்பூசம் : 1,2,3 பாதங்கள்

 

4. கடக ராசி : 90 to 120 டிகிரி

கடக ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்

புனர்பூசம் : 4 பாதம்

பூசம் : 1,2,3,4 பாதங்கள்

ஆயில்யம் : 1,2,3,4 பாதங்கள்

 

5. சிம்ம ராசி : 120 to 150 டிகிரி

சிம்ம ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்

மகம் : 1,2,3,4 பாதங்கள்

பூரம் : 1,2,3,4 பாதங்கள்

உத்திரம் : 1 பாதம்

 

6. கன்னி ராசி : 150 to 180 டிகிரி

கன்னி ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்

உத்திரம் : 2,3,4 பாதங்கள்

அஸ்தம் : 1,2,3,4 பாதங்கள்

சித்திரை : 1,2 பாதங்கள்

 

7. துலாம் ராசி : 180 to 210 டிகிரி

துலாம் ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்

சித்திரை : 3,4 பாதங்கள்

சுவாதி : 1,2,3,4 பாதங்கள்

விசாகம் : 1,2,3 பாதங்கள்

 

8. விருச்சக ராசி : 210 to 240 டிகிரி

விருச்சிக ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்

விசாகம் : 4 பாதம்

அனுஷம் : 1,2,3,4 பாதங்கள்

கேட்டை : 1,2,3,4 பாதங்கள்

 

9. தனுசு ராசி : 240 to 270 டிகிரி

தனுசு ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்

மூலம் : 1,2,3,4 பாதங்கள்

பூராடம் : 1,2,3,4 பாதங்கள்

உத்திராடம் : 1 பாதம்

 

10. மகர ராசி : 270 to 300 டிகிரி

மகர ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்

உத்திராடம் : 2,3,4 பாதங்கள்

திருவோணம் : 1,2,3,4 பாதங்கள்

அவிட்டம் : 1,2 பாதங்கள்

 

11. கும்ப ராசி : 300 to 330 டிகிரி

கும்ப ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்

அவிட்டம் : 3,4 பாதங்கள்

சதயம் : 1,2,3,4 பாதங்கள்

பூரட்டாதி : 1,2,3 பாதங்கள்

 

12. மீன ராசி : 330 to 360 டிகிரி

மீன ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்

பூரட்டாதி : 4 பாதம்

உத்திரட்டாதி : 1,2,3,4 பாதங்கள்

ரேவதி : 1,2,3,4 பாதங்கள்


27 நட்சத்திரங்களின் தமிழ் பெயர்கள்:-

1.அசுபதி - புரவி

2.பரணி - அடுப்பு

3.கார்த்திகை = ஆரல்

4.ரோகிணி = சகடு

5.மிருகசீரிடம்=மான்றலை

6.திருவாதிரை=மூதிரை

7.புனர்பூசம் =கழை

8.பூசம் =கொடிறு

9.ஆயில்யம் =அரவு

10.மகம் =கொடுநுகம்

11.பூரம் =கணை

12.உத்திரம் =உத்தரம்

13.அஸ்தம் =கை

14.சித்திரை =அனுபை

15.சுவாதி =விளக்கு

16.விசாகம் =முறம்

17.அனுஷம்=பனை

18.கேட்டை=துலங்கொலி

19.மூலம் =குருகு

20.பூராடம் =முற்குலம்

21.உத்திராடம்=கடைக்குலம்

22.திருவோணம்=முக்கோல்

23.அவிட்டம் =காக்கை

24.சதயம் =செக்கு

25.பூரட்டாதி =நாழி

26.உத்திரட்டாதி=முரசு

27.ரேவதி =தோணி


1.சித்திரை =மேழம்

2.வைகாசி =விடை

3.ஆனி =ஆடவை

4.ஆடி =கடகம்

5.ஆவணி =மடங்கல்

6.புரட்டாசி =கன்னி

7.ஐப்பசி =துலை

8.கார்த்திகை =நளி

9.மார்கழி =சிலை

10.தை =சுறவம்

11.மாசி =கும்பம்

12.பங்குனி =மீனம்

நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ, அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது. நமது நட்சத்திரத்திற்கும் வாழ்விற்கு தொடர்பு உள்ளதாக ஜாதக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும், வாழ்க்கையில் வளமும் கிடைக்கும்.

27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் பற்றிய தகவலை இங்கே பார்க்கலாம். 

அஸ்வினி - சரஸ்வதி தேவி 

பரணி - துர்கா தேவி (அஸ்ட புஜம்)

கார்த்திகை - முருகப்பெருமான் 

ரோகிணி - கிருஷ்ணன் 

மிருகசீரிஷம் - சிவபெருமான் 

திருவாதிரை - சிவபெருமான் 

புனர்பூசம் - ராமர் 

பூசம் - தட்சிணாமூர்த்தி 

ஆயில்யம் - ஆதிசேஷன் 

மகம் - சூரிய பகவான் 

பூரம் - ஆண்டாள் 

உத்திரம் - மகாலட்சுமி 

ஹஸ்தம் - காயத்திரி தேவி 

சித்திரை - சக்கரத்தாழ்வார்

சுவாதி - நரசிம்மமூர்த்தி 

விசாகம் - முருகப்பெருமான் 

அனுசம் - லட்சுமி நாராயணர் 

கேட்டை - வராஹ பெருமாள் 

மூலம் - ஆஞ்சநேயர் 

பூராடம் - ஜம்புகேஸ்வரர்

உத்திராடம் - விநாயகப் பெருமான் 

திருவோணம் - ஹயக்ரீவர் 

அவிட்டம் - அனந்த சயனப் பெருமாள் 

சதயம் - மிருத்யுஞ்ஜேஸ்வரர் 

பூரட்டாதி - ஏகபாதர் 

உத்திரட்டாதி - மகா ஈஸ்வரர் 

ரேவதி - அரங்கநாதன் 

அந்தந்த நட்சத்திரத்திற்கு உரியவர்கள் தங்களுக்குரிய தெய்வங்களை வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம் என ஜாதகபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

27 நட்சத்திர அதிபதி | 27 Nakshatras Gods in Tamil

அசுவினி – கேது
பரணி – சுக்கிரன்
கிருத்திகை – சூரியன்
உரோகிணி – சந்திரன்
மிருகசீரிடம் – செவ்வாய்
திருவாதிரை – இராகு
புனர்பூசம் – குரு (வியாழன்)
பூசம் – சனி
ஆயில்யம் – புதன்
மகம் – கேது
பூரம் – சுக்கிரன்
உத்திரம் – சூரியன்
அசுதம் – சந்திரன்
சித்திரை – செவ்வாய்
சுவாதி – இராகு
விசாகம் – குரு (வியாழன்)
அனுடம் – சனி
கேட்டை – புதன்
மூலம் – கேது
பூராடம் – சுக்கிரன்
உத்திராடம் – சூரியன்
திருவோணம் – சந்திரன்
அவிட்டம் – செவ்வாய்
சதயம் – இராகு
பூரட்டாதி – குரு (வியாழன்)
உத்திரட்டாதி – சனி
இரேவதி – புதன்

குருவருளும் திருவருளும் ஒருங்கே துணை நிற்க...! 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

-திருச்சிற்றம்பலம்-

-ஓம் நமசிவாய-

-அன்பே சிவம்-

-சர்வம் சிவார்ப்பணம்-

-காக்கும் நாயகி 'ஸ்ரீ கடந்தை நாயகி' என்கிற 'ஸ்ரீ அழகிய காதலி அம்மன்' என்கிற 'ஶ்ரீ ஆமோதனாம்பாள்' உடனுறை எம்பெருமான் 'ஶ்ரீ கைவழங்கீசனார்' என்கிற 'ஶ்ரீ பிரளயகாலேசுவரர்' என்கிற 'ஸ்ரீ சுடர்கொழுந்தீசர்' என்கிற 'ஸ்ரீ தூங்கானைமாடத்து நாதர்' போற்றி! போற்றி!!-

-ஸ்ரீ அன்பிற்பிரியாள் அம்மன் தாயே போற்றி-

-மங்கள தேவி ஸ்ரீ கண்ணகி அம்மன் தாயே போற்றி-

-வணிகர் குல நாயன்மார்கள் அறுவர் திருவடிகளே சரணம்-

-எம்பிரான் ஸ்ரீ கலிக்கம்பரின் திருவடிகளே சரணம்-

-எம்பிரான் ஶ்ரீ மெய்கண்டார் திருவடிகளே சரணம்-

-எம்பிரான் ஶ்ரீ  சிவ மறைஞான சம்பந்தர் திருவடிகளே சரணம்-

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

என்றென்றும் எம்பிரான் ஸ்ரீ கலிக்கம்பர் வழியின் சிவத்தொண்டில், சிவ பக்தியில்சிவ நெறியில்சிவ உணர்வில்இறைப்பணிகளில்சமயப்பணிகளில் மற்றும் சமுதாயப்பணிகளில்,

அடியார்க்கும் அடியேன்,


இவண்,


#பெண்ணாடம், எம்பிரான் ஸ்ரீ #கலிக்கம்ப_நாயனார்_மடாலயம்  மற்றும் #வாணியர்_சங்கம் நிர்வாகங்களின்,
 
#தலைவர் / #செயலாளர் / #பொருளாளர்  

   மற்றும் #செயற்குழு & #பொதுக்குழு உறுப்பினர்கள் &  எம்பிரான் ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் குல வழித்தோன்றல்களாகிய #வணிக_வைசிய_வாணியர்_செட்டியார்_சமூகத்தார்கள்/நிர்வாகத்தினர்கள்

#ஸ்ரீ_கலிக்கம்ப_நாயனார்_மடாலயம் & #வாணியர்_சங்கம், 

13/7, கிழக்கு இராஜ வீதி, 
#பெண்ணாடம் _அஞ்சல் - 606 105,      
      #திட்டக்குடி_வட்டம், 
#கடலூர்_மாவட்டம், 
#தமிழ்நாடு_மாநிலம்.




#நாயன்மார்கள், 
#குருமார்கள், 
#அவதாரத்தலம், 
#முக்தித்தலம், 
#குரு_வழிபாடு, 
#குரு_பூஜை, 
#அவதார_நட்சத்திரம், 
#முக்தி_நட்சத்திரம், 
#வருட_மாத_குரு_அவதார_நட்சத்திர_வழிபாடு
#வருட_,மாத_குரு_முக்தி_நட்சத்திர_வழிபாடு
#தினசரி_குரு_வழிபாடு
#மானிடர்_பிறந்த_நட்சத்திரம்
#நட்சத்திர_பாதம் 
#27_நட்சத்திரங்கள்
#நட்சத்திர_இராசி_மண்டலம்
#27_நட்சத்திரங்களின்_தமிழ்_ பெயர்கள்
#27_நட்சத்திரங்களுக்கு_உரிய_அதிர்ஷ்டம்_தரும்_தெய்வங்கள்
#27_ நட்சத்திர_அதிபதிகள்

Comments

Popular posts from this blog

கலிக்கம்ப நாயனார் : - ஸ்ரீ கலிக்கம்ப நாயனாரின் குல வழித்தோன்றல்களாகிய வணிக வைசியர் (வாணியர் செட்டியார்கள்) சமூகத்துக்கு சொந்தமான, பெண்ணாடம் 🔔🙏🌷🛕 எம்பிரான் "ஸ்ரீ கலிக்கம்ப நாயனார் மடாலயம்" 🛕🌷🙏🔔 - KALIKKAMBA NAYANAR :- PENNADAM 🔔🙏🌷🛕 EMPHIRAN "SRI KALIKKAMBA NAYANAR MADALAYAM" 🛕🌷🙏🔔 IS OWNED BY THE VANIGA VAISHYAR (VANIYAR CHETTIYARS) COMMUNITY WHO ARE THE CLAN DESCENDANTS OF SRI KALIKKAMBA NAYANAR

🗣️📢📣 வணிக வைசிய வாணியர் செட்டியார் குலத்தின் ஆயிரம் கோத்திரங்களின் பெயர் பட்டியல் 📝 - 🗣️📢📣 List 📝of Names of Thousand Gotras of Vaniga Vaishya Vaniyar Chettiyar Clan

🗣️📣📢 வணிக வைசிய குல விளக்கம் 📝📚 - 🗣️📣📢 Vaniga Vaishya Kula Vilakkam 📝📚 - (🗣️📣📢 Description of Vaniga Vaishya Clan 📝📚)