Posts

Showing posts from October, 2023

🗣️📣📢 வணிக வைசிய வாணியர் செட்டியார் குலப் பழமொழிகள் 📝📚 - 🗣️📣📢 VANIGA VAISHYA VANIYAR CHETTIYAR KULA PAZHAMOZHIGAL 📝📚 - 🗣️📣📢 Vaniga Vaishya Vaniyar Chettiyar Clan Proverbs 📝📚

Image
  வணிக வைசிய  "வாணியர்  செட்டியார்"  குலப்  பழமொழிகள்   பழமொழிகள் சமுதாயத்தின் மக்களிடையே ஓழுக்கங்களை போதிக்கவல்லது என்றும் அது மனித மனத்தை பண்படுத்தவல்லது என்றும் நாம் கருதுகிறோம். பழமொழிகள் யாவும் மக்களின் அனுபவக் குரலாக ஒலிக்கின்றன. பழமொழிகள் சமுதாயத்தில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாட்டுக் கோலங்கள், சமூக-சாதி உணர்வுகள், தொழில்கள் ஆகியவற்றைக் காட்டும் கண்ணாடியாக விளங்குகின்றன. சமுதாய வாழ்வின் பொதுவான போற்றுதல்களையும் தூற்றுதல்களையும் விளக்கிக் கூறுபவைகளாகவும் காணப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள மக்கள் கூறும் பழமொழிகளிலிருந்து அவர்களின் வாழ்க்கைச் சித்திரத்தை ஓரளவிற்கு ஊகித்துணர முடியும். அவர்களது வாழ்க்கை நெறிமுறைகளையும், குடும்ப நிலைகளையும் ஆய்ந்தறிய பழமொழிகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன என்பதைத் துணிந்து கூறலாம். பழமொழிகள் மக்களின் பண்பாடு கலாசாரத்தை வெளுத்துக் காட்டுபவை ( பி ரதிபலித்தல்). எல்லா நாடுகளிலும் பல மொழிகளிலும் பழமொழிகள் உண்டு . நம் இந்தியாவில் ப ழ மொழிகளுக்கென தனி அகராதியே போடலாம். தமிழ்நாட்டில் ப ழ மொழிகள் என்பது தனி இலக்க...